ஜுனைட்.எம்.பஹ்த்-
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் மாதாந்தம் இடம்பெறும் விஷேட சொற்பொழிவுத்தொடரில், அக்டோபர் மாதத்துக்கான சொற்பொழிவு 4ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6.45 மணிக்கு ‘ஆன்மிக வாழ்வு: மைற்கற்களும் தடைக்கற்களும்‘ எனும் கருப்பொருளில் இடம்பெறவுள்ளது.
77, தெமட்டகொட வீதி, கொழும்பு- 09 இல் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் இடம்பெறும் இவ்விஷேட சொற்பொழிவை, இஸ்லாஹிய்யா அறபுக்கல்லூரி அதிபர் உஸ்தாத் எம். யூ. எம். றம்ஸி அவர்கள் நிகழ்த்தவுள்ளார்.
மஃரிப், இஷா தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதையும் அறியத்தருவதோடு, காலத்துக்குத்தேவையான தொனிப்பொருளில் இடம்பெறும் இச்சொற்பொழிவில் கலந்து பயன்பெறுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.