திருகோணமலைக்கு ரோட்டரி ஆளுநர் வருகை..!

ரோட்டரி மாவட்ட - 3220 ஆளுநர் சேனக அமரசிங்க 02-10-2016 அன்றுதிருகோணமலை ரோட்டரி கழகத்துக்கு விஜயம் செய்தார். உதவி ஆளுநர் ஆத்ம ராம் அவர்களும் அவருடன் இணைந்து கொண்டார் .

திருகோணமலை ரோட்டரி கழக தலைவர் - திரு ச சிவசங்கர் விருந்தினர்ககளை வரவேற்றார். செயலாளர் சுரேஷ் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைகள் பற்றி ஒருசுருக்கமான விளக்கத்தை கொடுத்தார்.

இரண்டு புதிய உறுப்பினர்கள் திருகோணமலை ரோட்டரி கழகத் தில் இணைந்து கொண்டார்கள். இரண்டு துவி சக்கர வண்டிகள் இரண்டு மாணவர்களுக்கு தங்கள் படிப்பைமேம்படுத்த ரோட் டேரியான் அகிலன் உதவியுடன், வழங்கப்பட்டது.

ஆளுநர் சேனக அமரசிங்க திருகோணமலை ரோட்டரி கிளப் நடவடிக்கைககளை பாராட்டியதுடன் மேலும் அதிக உறுப்பினர்களை சேர்க்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார். அவர் மரம் நடும் திட்டத்தை செயல் படுத்துவதில் அதிக கவனம் செலுத்தும் படி கேட்டு கொண்டார் மற்றும் சாதனை ரோட்டரி கழகத் தின் பெரியசாதனையான போலியோ இல்லாத உலகம் மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும்படி கேட்டுக் கொண்டார்.

செயலாளர் சுரேஷ் நன்றியுரை வழங்கினார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -