காமிஸ் கலீஸ்-
மருதமுனை அந்-நஹ்ழா அரபிக்கல்லூரியின் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முஹர்ரம் சிறப்பு மாணவர் மன்றம் கடந்த 20.10.2016 அன்று மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கல்லூரியின் கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடந்தேறியது.
இன் நிகழ்வின்போது பேச்சு, மொழிபெயர்ப்பு, சமகால நிகழ்வுத் தொகுப்பு, இஸ்லாமிய கீதம் மற்றும் பல்சுவை நிகழ்வுகள் என மாணவர்கள் தமது திறமைகளை வெளிக்காட்டினர்.
மேலும் இன் நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக கல்லூரியின் பழைய மாணவர்கள், ஒஸ்தாத்மார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இஸ்லாமிய ஆண்டின் சிறப்பான தருணங்களை நினைவுகூரும் வண்ணம் மருதமுனை அந்-நஹ்ழா அரபிக்கல்லூரி மாணவர்களினால் இவ்வாறான ஒன்றுகூடல் நிகழ்வுகள் வருடம்தோறும் நடாத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.