அஸ்லம் எஸ்.மௌலானா-
இம்முறை தரம்-5 புலமைப் பரீட்சையில் கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, திருக்கோவில் ஆகிய நான்கு கல்வி வலயங்களை உள்ளடக்கிய கல்முனை கல்வி மாவட்டத்தில் மொத்தம் 784 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
இதன் பிரகாரம் கல்முனை கல்வி வலயத்தில் 322 மாணவர்களும் சம்மாந்துறை கல்வி வலயத்தில் 124 மாணவர்களும் அக்கரைப்பற்றுக் கல்வி வலயத்தில் 228 மாணவர்களும் திருக்கோவில் கல்வி வலயத்தில் 110 மாணவர்களும் சித்தி பெற்றுள்ளனர்.
இதன் பிரகாரம் கல்முனை கல்வி வலயத்திலுள்ள கல்முனை முஸ்லிம் கல்விக் கோட்டத்தில் கோட்டத்தில்-114, கல்முனை தமிழ் கல்விக் கோட்டத்தில்-99, நிந்தவூர் கோட்டத்தில்-39, சாய்ந்தமருது கோட்டத்தில்-35, காரைதீவு கோட்டத்தில்-35 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
கல்முனை பற்றிமாக் கல்லூரி மாணவன் சசிகரபவன் ஹிமாசலன் 183 புள்ளிகளை பெற்று கல்முனை வலயத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
அதேவேளை சம்மாந்துறை கல்வி வலயத்திலுள்ள சம்மாந்துறை கல்விக் கோட்டத்தில்-97, நாவிதன்வெளிக் கோட்டத்தில்-15, இறக்காமம் கோட்டத்தில்-12 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
அத்துடன் அக்கரைப்பற்றுக் கல்வி வலயத்திலுள்ள அக்கரைப்பற்றுக் கோட்டத்தில் 98 பேரும் அட்டாளைச்சேனைக் கோட்டத்தில் 91 பேரும் பொத்துவில் கோட்டத்தில் 39 பேரும் சித்தியடைந்துள்ளனர்.
அக்கரைப்பற்றுக் கல்வி வலயத்திலுள்ள அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலய மாணவன் முஹம்மட் ஜாபிர் அத்தீக் அஹமட் 187 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.
திருக்கோவில் கல்வி வலயத்திலுள்ள பொத்துவில் கோட்டத்தில் 14 மாணவர்களும் திருக்கோவில் கோட்டத்தில் 40 மாணவர்களும் ஆலையடிவேம்புக் கோட்டத்தில் 56 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.