1000 CC இலும் குறைந்த கார்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ள போதிலும், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் உற்பத்தி வரி அதிகரிப்பை அடுத்து, 1000 CC (சிலிண்டர் கொள்ளளவு) இலும் அதிகமான கார்களின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிஸ்ஸான் எக்ஸ்-ட்ரையல் (Nissan X-Trail) கார் ஒன்றின் முந்தைய வரி ரூபா 4.6 மில்லியனாக காணப்பட்டதோடு, தற்போது அதற்கான வரி ரூபா 7.9 மில்லியனாக அதிகரித்துள்ளதால், சந்தை விலை ரூபா 10 - 11 மில்லியனாக அதிகரிக்கும் என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அவுட்லாண்டர் ஒன்றின் வரி ரூபா 5.4 மில்லியனாக காணப்பட்ட நிலையில், தற்போது அதன் வரி ரூபா 7.96 மில்லியனாக அதிகரிப்பதனால், அதன் விலை ரூபா 13 மில்லியன் வரை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோன்று நடுத்தர Axio ஹைபிரிட் வாகனத்தின் வரி ரூபா 2.8 மில்லியனிலிருந்து ரூபா 3 மில்லியனாக அதிகரிப்பதோடு, Aqua மற்றும் Fit கார்களின் விலையும் இவ்வாறு அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.