ஒவ்வொருவருக்கும் 1GB இலவச WIFI வழங்கும் இலங்கை அரசு

இலவச Wi-Fi வசதிகள் வழங்கும் திட்டத்தின் குறைப்பாடுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் அந்த சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான நிகழ்வு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தலைமையில் நேற்று பதுளையில் நடைபெற்றது.

இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர்,

நாடு முழுவதும் 405 இடங்களில் நேற்று முதல் இலவச Wi-Fi வசதிகளை பெற்றுக் கொள்ள முடியும். வாக்குறுதியளித்ததனை போன்று குறைப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டு மிகவும் வலுவான வகையில் இலவச வைபை வசதிகள் நாடு முழுவலும் அமுல்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 25582 உறுப்பினர்கள் இந்த சேவையை பெற்றனர். எனினும் இன்று முதல் எந்தவொரு இடத்திலும் எந்தவொரு நபருக்கும் தனது அடையாள அட்டை இலக்கத்தை உட்புகுத்தி சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

தொலைபேசி உள்ளடக்கியதனை தொடர்ந்து கையடக்க தொலைபேசி இலக்கங்களை அதற்குள் உள்ளடக்கியதன் பின்னர் Pin இலக்கம் கிடைக்கும். அதனை உங்களின் தொலைப்பேசியில் பதிவு செய்துக் கொள்வதன் ஊடாக இலவச வைபை வலையமைப்பிற்குள் நுழைய முடியும்.

கிட்டத்தட்ட ஒரு நபருக்கு 1GB அளவிலான இணைய வசதிகளை பெற்றுக் கொள்ள முடியும். இன்றைய தினம் இதற்காக உத்தியோகபூர்வ நிகழ்வொன்றை பதுளையில் ஏற்பாடு செய்து வெற்றிகரமான ஆரம்பித்து வைத்துள்ளோம்.

பிரோட்பேன்ட் ஊடாக அரச நிறுவனங்களுக்கு இலவச இணைய வசதிகளை வழங்கும் நடவடிக்கையையும் ஆரம்பித்துள்ளோம். இலங்கையில் உள்ள அதிக வேகமான இணைய வசதியை வலையமைப்புகள் ஊடாக அரசாங்க நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிய 1919 என்ற இலக்கத்திற்கு பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -