அஸ்ரப் ஏ சமத்-
சிறந்த இணைய திறமையுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் குறித்த நிறுவனம் பிரபல இளம் தொழிலதிபர் இஸ்ரத் இஸ்மாயினால் (Israth Ismail) நடாத்தப்படுகிறது.
ஐக்கிய இராச்சியத்தில் தலைமையகத்தை கொண்டுள்ள குறித்த நிறுவனம் தற்பொழுது இலங்கையிலும் செயற்பட்டு வருகிறது. இணைய வர்த்தகத்தில் பிரபல்யம் பெற்றுள்ள இந்நிறுவனம் பல்வேறுபட்ட தகவல் தொழில்நுட்ப துறைகளில் பாண்டித்தியம் பெற்றுள்ள பல இளைஞர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்நிறுவனம் ஜனாதிபதியின் வலைத்தளத்தை ஹேக் செய்த இளைஞனுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
உலகிலே இன்று அறிவுப் பொருளாதாரம் அதிஉச்ச நிலையில் இருக்கின்ற காலப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குறித்த இளைஞனுக்கு நல்ல தொழில்வாய்ப்பை எங்களுடைய நிறுவனத்தில் வழங்குவது என்பதற்கு காரணம் பலவிருக்கிறது.
இவர்களுடைய குற்றம் ஒரு பக்கம் இருக்க, இப்படியான திறமை உள்ள இளைஞர்கள் உலக அளவில் மிகக் குறைவாகவே இருக்கின்றனர், இவர்களுக்கு நல்ல சரியான நெறிமுறைகளை சொல்லிக் கொடுத்து, பண்படுத்தி, வளப்படுத்தி நம் நாட்டிற்கு சாதமாக பயன்படுத்த வேண்டும்,
ஜனாதிபதியின் வெற்றிப்பாதைக்கு வழி செய்த இணைய கம்பனிகளில் ஒன்றான எமது நிறுவனம் என்ற அடிப்படையில் அந்த இளைஞனை ஜனாதிபதி மண்ணித்து உடனடியாக விடுவித்து நல்லதொரு பாதைக்கு இட்டுச் செல்ல வழிசமைக்க கேட்டுக் கொள்கிறோம் என்று நிறுவனத்தின் தலைவர் எமக்கு தெரிவித்தார்.
இஷ்ரத் இஸ்மாயில் சாய்ந்தமருதை பிறப்பிடமாகவும் கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.