ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை மஹிந்த உறுதிசெய்வார் - இம்ரான் மஹ்ரூப்

எப்.முபாரக்-
டுத்துவரும் தேர்தல்களில் ஐக்கியதேசிய கட்சியின் வெற்றியை மஹிந்த ராஜபக்ச உறுதிசெய்வார் என தெரிவித்தார் ஐக்கிய தேசிய கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப். சனிக்கிழமை (24) கொழும்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார் அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் உருவாக்கப்பட்ட நல்லாட்சி இந்நாட்டில் இல்லாதொழிக்கப்பட்ட ஜனநாயகத்தை மீளக்கட்டியெழுப்புவதில் வெற்றிகண்டு வருகின்றது இதற்கு சிறந்த உதாரணம் அண்மைக்காலங்களில் அரசுக்கெதிராக நடைபெற்ற போராட்டங்களும் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தங்களும் கடந்த ஆட்சியில் இவ்வாறு நடந்திருந்தால் பலரின் வீடுகளுக்கு வெள்ளை வேன் சென்றிருக்கும்

அண்மைக்காலங்களில் அரசுக்கெதிராக பல போராட்டங்களை அரச வைத்தியர் சங்கம் முன்னெடுத்தது கடந்த ஆட்சிகாலத்தில் தனியார் வைத்திய கல்லூரி அமைத்த போதும் மருந்துகளில் மோசடி செய்தபோதும் இவர்கள் தூக்க மாத்திரை எடுத்துகொண்டனரா என ஆராயவேண்டும் கடந்த வாரம் கூட இவர்கள் தமது பிள்ளைகளுக்கு பிரபல பாடசாலைகளில் அனுமதி பெற்றுத்தரவேண்டும் என கூறி பணிப்பகிஸ்கரிப்பு செய்து கல்வி அமைச்சினுள் புகுந்து போராட்டங்களை முன்னெடுத்தனர்

எமது நாட்டில் அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்படுகிறது இதில் யாருக்கும் விசேட சலுகை வழங்கப்படாது என்பதில் அரசாங்கம் தெளிவாக உள்ளது இவர்களின் பிள்ளைகளுக்கு பிரபல பாடசாலைகளில் அனுமதியளித்தால் அது இலங்கையிலுள்ள பதினான்கு இலட்சம் அரச ஊழியர்கள் உட்பட அனைத்து பிரஜைகளுக்கும் செய்யும் அநீதியாகும் கூலி வேலை செய்யும் பெற்றோர்களுக்கும் தமது பிள்ளைகளை பிரபல பாடசாலைகளில் சேர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆகவே இந் நல்லாட்சியில் அனைத்தும் அரச சுற்றுநிருபத்த்துக்கு அமைவாகவே நடைபெறும்

தமது சொந்த தேவைகளுக்காக பணிபகிஸ்கரிப்பு செய்வதும் ஒரு அதிகார துஸ்பிரயோகமாகும் இவர்களின் போராட்டங்களின் பின்னால் அரசியல் நிகழ்ச்சி நிரலொன்று காணப்படுவது பொதுமக்களுக்கு தற்போது தெளிவாகியுள்ளது

நீங்கள் அனைவரும் எதிர்பார்ப்பது போன்று 2020 இல் ஐக்கிய தேசிய கட்சி தனித்து ஆட்சியமைக்கும் அடுத்துவரும் தேர்தல்களில் ஐக்கியதேசிய கட்சியின் வெற்றியை மஹிந்த ராஜபக்ச உறுதிசெய்வார் அவர் எப்போது தனிக்காட்சி ஆரம்பிப்பார் என நாமும் எதிர்பார்த்துள்ளோம் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தனிக்கட்சி ஆரம்பிக்கபோகிறேன் என கூறிக்கொண்டே வருகிறாரே தவிர இன்னும் அமைத்தபாடில்லை இந்த வாக்குறுதியையே அவரால் நிறைவேற்ற முடியாவிட்டால் எவ்வாறு மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்றுவார் இனி அவரால் எக்காலத்திலும் ஆட்சிக்கு வரமுடியாது எனகூறினார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -