க.கிஷாந்தன்-
நிலவும் வரட்சி காலநிலை காரணமாக தாழ் நிலப்பகுதிகளுக்கு தேவையான நீரை வழங்குவதற்காக 14.09.2016 அன்று கொத்மலை காமினி திஸாநாயக்க நீர்தேகத்தின் மேலதிக நீரை வெளியேற்றும் சுருங்கை ஒன்று திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்தேக்கத்தின் பொறுப்புவாய்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த சுருங்கை திறந்து விடப்பட்டுள்ளதால் மகாவலி ஆற்றில் உலப்பனையிலிருந்து கம்பளை, கெலிஓயா, பேராதெனிய, கடுகஸ்தொட ஊடாக பொல்கொல்ல வரை பிரதேசத்தின் குளங்கள் மற்றும் ஏரிகள் ஆகியவற்றின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் காரணமாக மகாவலி ஆற்றை பயன்படுத்தும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு மகாவலி அதிகார சபை கோரியுள்ளது.