எப்.முபாரக்-
திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதின்மூன்று வயதுடைய சிறுமியொருவரை வண்புனர்வுக்குட்படுத்த முயன்ற நபர் ஒருவரை இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க நேற்று புதன்கிழமை(7) உத்தரவிட்டார். அக்போபுர ,வட்டுக்கச்சி வீதி, பகுதியைச் 27 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரின் எதிர்வீட்டிலே சிறுமியின் வீடு அமைந்துள்ளது, சிறுமியின் வீட்டில் யாருமில்லாத சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி குறித்த சந்தேக வண்புனர்வுக்குட்படுத்த முயன்றதாக சிறுமியின் பெற்றோர்களினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதற்கிணங்க செவ்வாய்கிழமை (6) பகல் கைது செய்ததாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சந்தேக நபரை விசாரணைகளின் பின் நேற்று புதன்கிழமை(7) பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.