யோசித்த ராஜபக்ஸ மற்றும் அவரின் பாட்டியுடையது என கூறப்படும் கல்கிஸ்சை மிஹிந்து மாவத்தையிலுள்ள காணியை எதிர்வரும் 20 மே் திகதி அளவீடு செய்யுமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கல்கிஸ்சை மேலதிக நீதவான் லோஷனி அபயவிக்ரமவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நில அளவை திணைக்களத்தின் ஆணையாளருடன் கலந்துரையாடி எதிர்வரும் 20 ஆம் திகதி குறித்த காணியை அளவீடு செய்வதற்கான அனுமதியை வழங்குமாறு பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவினர் நீதிமன்றத்திடம் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
மேலும் காணி அளவீட்டு பணியின் போது சந்தேகநபர்கள், காணி உறுதி பத்திரத்தின் மூலப் பிரதியை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடுமாறும் பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
கல்கிஸ்சை மிஹிந்து மாவத்தையிலுள்ள குறித்த காணி 60 பர்ச்சர் பரப்பளவானது என்பது குறிப்பிடத்தக்கது.
