"தேசியப்பட்டியலைக் காட்டி ஏமாற்றப்படும் அம்பாறை மாவட்ட மக்கள்" நாபீர்

தேர்தல் காலங்களில் பல்வேறு பசப்புவார்த்தைகளையும் வாக்குறுதிகளையும் அம்பாறை மாவட்ட மக்களுக்கு வழங்கிய தங்களை தலைவர்கள் என்று கூறி தம்பட்டம் அடிப்போர் வழங்கிய தேசியப்பட்டியல் வாக்குறுதி வருடத்தையும் தாண்டியும் நிவர்த்திக்கப்படாது இருப்பத்து கண்டிக்கும் வன்னிக்கும் அம்பாறை சோரம் போய்விட்டதா என்று நினைக்கத்தோன்றுவதாக நாபீர் பௌண்டேசனின் ஸ்தாபகரும் சமூக ஆர்வலருமான உதுமாங்கண்டு நாபீர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

அட்டாளைச்சேனை மக்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்கிய வாக்குறுதியையும் 33000 வாக்குகளை வழங்கிய மக்களுக்கு அதாவது ஹமீட், ஜெமீல் போன்றோருக்கு வழங்கியதாக கூறப்படும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் வாக்குறுதியும் நிறைவேற்றுவதாக கூறிய காலக்கெடு கடந்துள்ள நிலையில் அந்தக்கட்சிகளின் தலைவர்கள் இம்மக்களின் ஆதங்கங்களை கண்டுகொள்ளாது இருப்பது அம்பாறை மாவட்ட மக்களை இவர்கள் ஏமாளிகள் போல் நோக்குவதாக நினைக்கத்தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளார். 

திணைக்களத்தலைவர் பதவிகளை பெறுவதற்காகவா நம்மவர்கள் வாக்குகளை அள்ளி வழங்கினார்கள்? இவர்கள் திணைக்களத் தலைவர்களானதில் நமது பிரதேசம் கண்ட நன்மைகள் என்ன? அகதி என்று கூறும் கோடீஸ்வரனையும் மௌனமாக இருக்கும் தலைவர்களையுமே உயர்த்தியுள்ளோம்! வாக்குறுதிகளை பெற்ற இம்மக்கள் இந்த தலைவர்களுக்கு எதிராக வீதிக்கு இறங்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்றும் காணிவேல் காட்டப்போகுறோம் மில்லியன் கணக்கில் அபிவிருத்தி செய்யப்போகுறோம் என்றெல்லாம் இம்மக்களை ஏமாற்றாது தேசியப்பட்டியல் வழங்குவேன் என அவர்கள் வழங்கிய கனவான் வாக்குறுதியை உடன் நிறைவேற்ற வேண்டும் என்று இருவரையும் கேட்டுக்கொள்வதாக உதுமாங்கண்டு நாபீர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

ஊடகப் பிரிவு : அல்ஹாஜ்.நாபீர் உதுமான் கண்டு தலைவர், 
நாபீர் பவுண்டேஷன் முகாமைத்துவ பணிப்பாளர், ECM Pvt Ltd
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -