கிழக்கு மாகாண மாதாந்த சபை அமர்வு நேற்று (22) காலை சபைத் தவிசாளர் சந்திரதாஷ கலபதி தலைமையில் இடம்பெற்றது. சபையில் பிரேரணைகள் உறுப்பினர்களால் முன்வைத்து உரையாற்றும் சந்தர்ப்பத்தில் மாகாண எதிர்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை உரை நிகழ்த்தும்போது இம்முறை அமைச்சராக இருக்கும் சந்தர்ப்பத்தில் வீதி அபிவிருத்திகளை மேற்கொள்ளுங்கள் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரை பார்த்து அடுத்த முறை இந்த அமைச்சு உங்களுக்கு வழங்கப்படமாட்டாது என்று குறிப்பிட்டார்.
அதனை குறுக்கிட்டுத் தடுத்த வீதி அபிவிருத்தி காணி அமைச்சர் ஆரியபதி கலைபதி நான் இம்முறை அமைச்சராக இருக்கிறேன் அடுத்த முறை இச்சபைக்கு நானே முதலமைச்சராக வருவேன் என்று அடித்துக்கூறுனார். குறித்த ஆரியக்காவின் கூற்றை எதிர்பாக்காத உதுமாலெப்பைக்கு அதிர்ச்சியாகவே இருந்திருக்கும்.