நியூயோர்க் நகரின் குகென்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள தங்கக் கழிப்பறை பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இத்தாலிய கலைஞரும் சிற்பியுமான Maurizio Cattelan என்பவரால் முழுமையாக செயல்படுத்தக்கூடிய வகையில் 18 கெரட் தங்கத்தில் குறித்த கழிப்பறை உருவாக்கப்பட்டு அதற்கு அமெரிக்கா என்று பெயரிடப்பட்டுள்ளது.
குகென்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் குளியலறைகள் ஒன்றினில் வைக்கப்பட்டிருக்கும் இந்த தங்கக் கழிப்பறை முழுமையாக பயன்படுத்தப்படக்கூடியதே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த அருங்காட்சியத்திற்கு வருவதற்கான அனுமதி கட்டணத்தை செலுத்தும் அனைவரும் குறித்த கழிப்பறையை உபயோகப்படுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
உலக மக்கள் தொகையில், ஒரு சதவீதத்தினருக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு அசாதாரணமான ஆடம்பரப் பொருளை பொது மக்களுக்கும் கிடைக்கச் செய்யும் நோக்கிலேயே குறித்த படைப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குகென்ஹெய்ம் அருங்காட்சியகம் அறிவித்துள்ளது.