ஏறாவூர் இரட்டைக் கொலை : நெருங்கிய உறவினர் ஒருவர் கைது

ட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை இன்று வியாழக்கிழமை காலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர் ஒருவரையே கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர். 

ஏறாவூர் பிரதேசத்தில் முகாந்திரம் வீதியை அண்டியுள்ள வீடொன்றில் தாயான நூர் முஹம்மது ஹுஸைராவும் (வயது 56) அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பாணுவும் (வயது 32) கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) மீட்கப்பட்டன.

சனிக்கிழமை (10) நள்ளிரவு வேளையில் இவர்கள் இருவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது, இவர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்து பிரேத பரிசோதனையின் பின்னர் நேற்று முன்தினம் இரவு ஜனாசாக்கள் நல்லடக்கம் செய்யபட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -