சவப்பெட்டியில் பெண் - 7 வருடம் பாலியல் பலாத்காரம்

வப்பெட்டி பெண் என அழைக்கப்படும் அமெரிக்கவைச் சேர்ந்த பெண் கொலீன் ஸ்டான் கிறார். சவப்பெட்டியில் இவர் 7 வருடங்களாக ஒரு பாலியல் அடிமையாக அடைபட்டு கிடந்துள்ளார். இவரது வாழ்க்கை அனுபவம் 2 புத்தகங்களாகவும் பல்வேறு ஆவண தொகுப்புக்களாளவும் வெளிவந்துள்ளன.

தற்போது இவரது கதை திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. அந்த படம் இந்த வாரம் வெளியாகிறது. குறித்த படத்திற்கு சவப்பெட்டி பெண் என பெயரிடப்பட்டுள்ளது. தனது சோதனையான அனுபவம் குறித்து வெளிநாட்டு இதழ் ஒன்றிக்கு அளித்துள்ள பேட்டியில் கொலீன் கூறி இருப்பதாவது:- 

1977 ஆம் ஆண்டும் காரில் பயணம் செய்து கொண்டு இருந்த கேமரூன் மற்றும் அவரது மனைவி ஜானீஸ் கூக்கர் ஆகியோரிடம் உதவி கேட்டு அக்காரில் ஏறினேன். எனக்கு நான் பாதுகாப்பாக இருப்பதாக முதலில் உணர்ந்தேன் ஏன் என்றால் அவர்களிடம் ஒரு குழந்தையும் இருந்தது. ஆனால் பயணம் நீண்டது. பயணத்தின் முடிவில் கேமரூன் கத்தி முனையில் என்னை மிரட்டினார். பின்னர் எனது கை கால்களை கட்டி ஒரு பெட்டியில் அடைத்தார் நான் நினைத்தேன் நான் சாகபோகிறேன் என்று.

கேமரூன் என்னை பாலியல் பலாத்காரம் செய்யவும் கொடுமை படுத்தவும் மட்டுமே என்னை பெட்டியில் இருந்து வெளியே கொண்டு வந்தார். ஒரு நாள் 23 மணி நேரம் பெட்டியிலேயே அடைத்து வைக்கப்பட்டேன். அவர் என்னை கட்டாயபடுத்தி பாலியல் அடிமையாக இருக்க கையெழுத்து வாங்கி கொண்டார். எனக்கு முன்னாள் அவரது மனைவியை அவர் பாலியல் அடிமையாக நடத்தி வந்துள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் அந்த இடத்திற்கு வேறு ஒருவரை கொண்டு வர எண்ணியுள்ளனர். அதில் நான் சிக்கி கொண்டேன். 

பின்னர் 1984 ஆம் ஆண்டும் கேமரூன் மனைவி ஜானீஸ் உதவியுடன் அதிலிருந்து தப்பினேன். கேமரூனுக்கு எதிராக அவர் நீதிமன்றத்தில் சாட்சியும் அளித்தார். என கூறி உள்ளார். கேமரூனின் இந்த குற்றத்திற்காக அவருக்கு 104 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கபட்டுள்ளது. தற்போது சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -