இலங்கை பல்கலைக்கழக பெண்கள் அமைப்பின் 75வது மாநாடு..!

அஷ்ரப் ஏ சமத்-
ந்த நாட்டின் இலஞ்ச ஆணைக்குழு பதவியில் இருக்கும் வரை எனது இறுதி மூச்சு இருக்கும் வரையும் இந்த இலங்கையில் இலஞ்சம், ஊழல் , சூது களவு ஏமாற்று போன்றவற்றினை ஒழித்து ஒரு நேர்மையான இலங்கை பிரஜைகள் கொண்ட ஒரு நாடாக எமது நாட்டை மாற்றியமைத்து விட்டே நான் மரணிப்பேன். என இலஞ்ச ஊழல் பணிப்பாளாளா் ஜனாதிபதி சட்த்தரணி திருமதி டில்ருக்சி டைஸ் விக்கிரமசிங்க தெரிவிப்பு

இலங்கை பல்கலைக்கழகத்தில் கற்ற பெணகள் அமைப்பினாின் 75ஆவது ஆண்டு விழா இன்று (14) பண்டாரநாயக்க ஞாபகாா்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இவ் அமைப்பின் தலைவி சீலா ஈபெர்ட் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அமைச்சா் சுசில பிரேம் ஜயந்தவும் கலந்து கொண்டாா். பிரதியமைச்சா் துலிப் விஜயசேகர கலந்து கொண்ட 

விசேட பேச்சாளராக ஜனாதிபதி சட்டத்தரணியும் லஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளா் தில்ருக்சி விஜயசேகரவும் கலந்து கொண்டு உரையாற்றினா் தபால் திணைக்களத்தினால் ஞாபகாா்த்த முத்திரையும் .இவ் அமைப்பின் முன்னாள் தலைவிகளுக்கு ஞாபகாா்த்த நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.  இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே லஞ்ச ஆணைக்குழுவின் பணிப்பாளா் மேற்கண்டவாறு தெரிவித்தாா்.

அவா் அங்கு தொடா்ந்து உரையாற்றுகைியல்: 

நான் லஞ்சம் சம்பந்தமாக சட்டத்துறையில் இலங்கை ,அவுஸ்திரேலியா விமானப்படை சட்ட அதிகாரி, மற்றும் அட்டேனி ஜென்ரல் திணைக்களம், ஜனாதிபதி சட்டத்தரணி, எல்.எல்.எம் கற்ற கல்வி யை இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் பிரயோசனம் அமடைய வேண்டும்.

இந்த நாட்டில் பிறப்பிலேயே குழந்தைக்கே ஊழல் பொய்களை சில பெற்றோா்கள் ஊட்டுகின்றனா். உதாரணமாக பாணந்துரையில் பிறந்த குழந்தையை கொண்டுவந்து மருதானையில் ஒரு 6 மாத வீட்டை வாடகைக்கு பெற்று பொய்யாக சான்றிதழ்கள் தயாரித்து கொழும்பில் உள்ள பிரபல்யமான பாடசாலைக்கு 1 ஆம் ஆண்டுக்கு சோ்ப்பதற்காக அந்த மாணவனிடமே கொழும்பில் பிறந்தாகவும் கொழும்பில் வாழ்வதாகவும் சொல்லிக் கொடுக்கின்றனா். பிறப்பிலேயே பொய் சொல்லச் சொல்லி பெற்றோரே பழக்குகின்றனா். இந்த நிலையை நாம் மாற்றுதல் வேண்டும்.

இந்த நாட்டில் இலவசக் கல்வி, இலவச பல்கலைக்கழக கல்வி, இலவச சுகாதாரம் என நாம் அனுபவித்து அரசாங்கத்தில் தொழில் பெற்றுகின்றோம். அரசாங்கத்தில் அலுவலகத்தில் ஊழல் செய்த அரச அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் நாம் உழல் செய்தமைக்கு சிரைச்சாலைக்கு அனுப்பினால் அங்கேயும் இவா்களுக்கு அரசாங்கத்தினால் இலவசமாக உணவு தங்குமிடம் மருந்துகள அரச செலவில் இலவசமாக பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அதனை நான் விரும்பவில்லை. அவ்வாறு அனுப்பினால் அவரின் சேவையை மேலும் பெற்றுக் கொள்ள வாய்ப்பில்லை. என தில்ருக்சி அங்கு தெரிவித்தாா்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -