சில்லறை விளையாட்டு விளையாடும் றிசாட் YLS குற்றச்சாட்டு

அஹமட் இர்ஷாட்-

அரசியலமைப்புச் சட்ட மாற்றம் தொடர்பாக நான் ஒரு தொடர்கட்டுரை எழுதி வருவதும் அது தொடர்பாக முக நூல் பதிவுகளையும் குரல் பதிவுகளையும் இட்டு வருவது அனைவரும் அறிந்ததே.

குறிப்பாக அதிகாரப் பரவலாக்கல் விசயத்தில் முஸ்லிம்கட்சிகள் மோசம் போய்விடக் கூடாது; என்ற ஆதங்கத்தில் இவ்வாறான ஆக்கங்கள் வெளியிடப் படுகின்றன. இந்த வரிசையில் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன் அதிகாரப் பகிர்வு தொடர்பாக ஒரு குரல் பதிவினை வெளியிட்டிருந்தேன். 

அதில் மத்திய அரசு சர்வதேச அபிப்பிராயங்களுக்கு செவி சாய்க்க வேண்டியதன் அவசியத்தையும் மாகாண அரசாங்கங்களுக்கு அவ்வாறான கடப்பாடு இல்லை என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தேன். அத்தோடு மத்தியில் முஸ்லீம்களுக்கு ஓரளவு அரசியல் பலம் இருப்பதையும் மாகாணங்களில் அவ்வாறான அரசியல் பலம் இல்லை என்பதையும் குறிப்பிட்டிருந்தேன் . அதே நேரம் நாம் பாராளுமன்றத்தில் குரலெழுப்பும் போது அது சர்வதேசத்தையும் சென்றடையும் என்றும் தெரிவித்திருந்திருந்தேன்.

அந்த இடத்தில் இன்னுமொரு குறிப்பையும் கட்டாயமாக தெரிவிக்க வேண்டியிருந்தது . ஏனெனில் எனது கட்டுரைகளில் விகிதாசரத்திற்கேற்ப முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்; என்று நான் எழுதுகின்றபொழுது "இவர்கள் பாராளுமன்றம் போய்த்தான் கண்ட பலன் என்ன?" என்று தங்கள் அங்கலாய்ப்பை comment ஆக சில சகோதரர்கள் வெளியிட்டிருக்கின்றார்கள். அந்தப் பின்னணியில்தான் நான் கூறினேன் ," இன்று நமக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க பிரதிநிதி இல்லாமல் இருக்கலாம் . பிபிஎஸ் போன்ற இனவாத அமைப்புக்கள் எங்கள் கண்மணி நாயகம் (ஸல்) அவர்களையே கண்ணியக் குறைவாகப் பேசுகின்றபோது வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றார்கள் . பாராளுமன்றம் தேங்காய் துருவுவதற்கா இருக்கின்றது ; என்ற கேள்வியை எழுப்பி விட்டு தொலைகாட்சிகளில் அநாகரீகமாக பேசிவிட்டு அடியாள்களை வைத்து வீரமாகப் பேசினார். வீரன், சிங்கம் என்றெல்லாம் எழுதத் தெரிந்தவர்களுக்கு பாராளுமன்றத்தில் ஏன் பேச முடியவில்லை ; என்ற கேள்வியை எழுப்பியிருந்தேன்.

றிசாட்டுக்கு தொப்பி பொருந்தி விட்டது. உடனே தன் வழமையான கைவரிசையைக் காட்ட ஆரம்பித்து விட்டார். எழுதுவதற்கு ஒரு அடியாள் . அதற்கு பெயர் போடுவதற்குவதற்கு ஒரு அடியாள் .

றிசாட் பதியுதீனிற்கு இவ்வாறு அடியாள்களை வைத்து எழுதுவதொன்றும் புதிதல்ல . என்னுடைய பெயரிலேயே எனக்குத் தெரியாமல் ஹுனைஸ் பாரூக்கிற் கெதிராக அசிங்கமாக எழுதியதும் நான் அதனை பகிரங்கமாக மறுத்ததும் வரலாறு.

அண்மையில் கூட, பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான் என்பது போல , அடியாட்களுக்கு 25000 ரூபாவுக்கு கலாநிதி பட்டம் வாங்குகின்ற செய்தியை எழுதச் சொல்ல அல்லாவின் வேலை, அது தவறுதலாக WhatsApp இல் போய் விழ றிசாட் கையும் களவுமாக மாட்டியது; எல்லோருக்கும் தெரியும் . அப்பவும் அந்த அசிங்கமான வேலையை விடவில்லை . பிறக்கும் போது முடமாம் . பேய்க்குப் பார்த்து தீருமா?

இப்பொது தொப்பி பொருந்தியதால் அடியாட்களை வைத்து YLS Hameed இற்கு எதிராக வசைபாடியிருக்கின்றார். அதை எனக்கும் tag பண்ணப் பட்டிருக்கிறது . அதனை நான் அழிக்க வில்லை. இதற்கு நான் பதிலெழுதாமல் இருக்க முடியுமா? ஆனால் அவர் எந்த அடியாளை வைத்து எனக்கெதிராக எத்தனை எழுதினாலும் அவை அனைத்தும் றிசாட்டால் எழதப்பட்டதேயாகும். எனவே, அந்த அடியாட்களுக்கு பதில் கொடுக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. அவை அனைத்திற்குமான பதில் றிசாட்டை நோக்கியதாகவே இருக்கும் இன்ஷா அல்லா?

நான் றெடி றிசாட் , நீங்க றெடியா? உங்களது சொந்தப் பெயரில் எழுத உங்களுக்கு துணிச்சல் இல்லை என்று எனக்குத் தெரியும் . நீங்கள் வேண்டிய அடியாளின் பெயரில் எழுதலாம் . அவை அனைத்தையும் அல்ஹம்துலில்லாஹ் இறைவனின் துணை கொண்டு YLS Hameed இன் பேனை சந்திக்கும் இன்ஷாஅல்லாஹ்.

உங்களுடைய சேறு பூசலுக்கு பதிலளிக்க முன், உங்களுடன் தான் நான் மு . கா விலிருந்து வெளியேறினேன். அப்படி இருக்க எனக்கெதிராக மு. கா ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து வெளியேற்றியதாக கூறியுள்ளீர்கள். அது எப்பொழுது நடந்தது . என்ன காரணத்திற்காக நடந்தது என்று கூறமுடியுமா? அவ்வாறு கூற முடியாவிட்டால் நீங்கள் ஒரு பச்சைப் பொய்யன் என்பதை பகிரங்கமாக ஏற்றுக் கொள்வீர்களா ? நீங்கள் யார் என்பது உங்களைத் தெரிந்த பலருக்கும் தெரியும். 

இருந்தாலும் பகிரங்கமாக ஒப்புக் கொள்வீர்களா? அடுத்தது, ' தத்துவப் பேரளிப்பு' என்ற ஒன்றை நான் மறந்து விட்டதாக கூறியிருக்கின்றீர்கள். நான் அப்படி ஒன்றை மறக்க வில்லை, அப்படி ஒரு விடயமே எனக்குத் தெரியாது. நான் நினைக்கிறேன் , உங்களுக்கு சொல்லித் தந்தவர்கள் ஏதோ ஒன்றைச் சொல்ல, நீங்கள் வேறு ஏதோ ஒன்றை எழுதியிருக்கின்றீர்கள், என்று. சொல்லித் தருவதைக் கூட ஒழுங்காக எழுதக் கூடாதா? அகசாய சூரனான உங்களுக்கு இதைக்கூட சரியாக செய்ய முடியாதா? தயவு செய்து, அது என்ன சொல் என்று உங்களுக்கு சொல்லித் தந்தவரிடம் கேட்டு ,அதன் ஆங்கிலப் பதத்தையும் கேட்டு எழுதவும் .

இறுதியாக, அதிகாரப் பகிர்வு முஸ்லிம்களுக்கு பாதகமானது, என்பதுவே, எனது வெளியீட்டின் கருப்பொருள். திறந்த பல்கலைக் கழக புத்தகத்திலும் அவ்வாறு எழுதியிருந்தால் அதை விட வேறு என்ன வேண்டும் முஸ்லிம்களுக்கு . அந்தப் பக்கத்தை வெளியிட முடியுமா?

தயவு செய்து உங்கள் பதிலை விரைவாகத் தரவும் , எனது பதிலை எழுதுவதற்கு .

றிசாட்!, தூறலுக்கே இவ்வாறு பதை பதைக்கின்றீர்களே! மழைக்கு , அதுவும் அடை மழைக்கு என்ன செய்வீர்கள் . அடியாள்களை இப்பவே, தயார் படுத்துங்கள்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -