கொழும்பு நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பரவியுள்ள ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையை ஒழிக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் கண்காணிப்பின் கீழ் விசேட தேடுதல் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளன.
இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அடங்கிய படையணி மூலம் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் தேவையான நேரத்தில் விமானப்படையின் உதவியும் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.
போதைப்பொருள் ஒழிப்புக்காக ஆரம்பிக்கப்படும் இந்த நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து ஒரு மாதத்தின் பின்னர் ஜனாதிபதியும் பிரதமரும் ஆராய்வார்கள்.
இரண்டாவது மாத நடவடிக்கையின் போது முதல் படையணியை விட இரண்டு மடங்கு அதிகமான படையினர் தேடுதலில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.