ஹாசிப் யாஸீன், அகமட் எஸ்.முகைதீன்-
கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அருகிலுள்ள பாடசாலை சிறந்தபாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ள சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் அபிவிருத்தி வேலைகள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும்நிகழ்வு இன்று (12) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.
அல்-ஜலால் வித்தியாலயத்தின் அதிபர் எம்.எஸ்.நபார் தலைமையில் இடம்பெறவுள்ளஇந்நிகழ்வில்விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும்இ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்பிரதித் தலைவருமான சட்டத்தரணிஎச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டுஅபிவிருத்தி வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவருமான ஏ.எல்.ஏ.மஜீத், கல்முனை மாநரக சபையின் முன்னாள் பிரதி முதல்வர் ஏ.ஏ.பசீர் உள்ளிட்ட கல்விமான்கள், பாடசாலை அபிவிருத்தி சபை உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனபலரும் கலந்து கொண்டனர்.
பிரதி அமைச்சர் ஹரீஸின் முயற்சியினால் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள 8 பாடசாலைகள்இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு 160 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்திசெய்யப்படவுள்ளன.
சாய்ந்தமருது பிரதேச பாடசாலைகளின் அபிவிருத்திற்கு நிதிகளை ஒதுக்கீடு செய்து தந்தபிரதி அமைசசர் ஹரீஸூக்கு கல்விமான்கள், புத்திஜீவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்,மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் தங்களது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.