வலம்புரி கவிதா வட்டத்தின் 29 வது பௌர்ணமி கவி யரங்கு 17/8/2016 புதன்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு 12 அல்ஹிக்மா கல்லூரியில் கவிஞர் பாடலாசிரியர் ஈழத்துஇரத்தினம் அவர்களின் அரங்காக நடைபெறும். கவிஞர் கவிக்கமல் ரஸீம் அவர்களின். தலைமையில் நடைபெறும் இவ்வரங்கில் மொழிபெயர்ப்பாளரும் ஈழத்து தமிழ்- சிங்கள திரைப்பட ஆய்வாளருமான புங்குடுதீவு தம்பிஐயா தேவதாஸ் அவர்கள் சிறப்பதியாக கலந்துக் கொண்டு கவிஞர் பாடலாசிரியர் ஈழத்து இரத்தினம் அவர்களைப் பற்றி சிறப்புரை ஆற்றுவார்.
கவிதை பாட விரும்புவோர் தலைவர் நஜ்முல் ஹுசைன் 0714929642 அல்லது செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் 0777388149 உடன் அல்லது கவிஞர் ஈழகணேஷ் 0717563646 உடன் தொடர்பு கொள்ளவும். கவிதைகள் கட்டாயமாக 4 நிமிடங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.