அஷ்ரப் ஏ சமத்-
தற்பொழுது நாட்டு மக்களுக்கு போதியளவு ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் கிடைக்கப் பெற்றுள்ளதால் மக்களிடம் 'நீங்கள் தற்பொழுது மகிழ்ச்சியாய் உள்ளீர்களா?' என கேட்க கூடியதாக உள்ளது என பாராளுமன்ற அங்கத்தினர் எஸ்.எம்.மரிக்கார் அவர்கள் கூறினார்கள். மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி நிர்வாக அமைச்சின் ஒதுக்கீட்டின் கீழ் மெகொட கொலொன்னாவை அரலிய உயன பாதை, வென்னவத்தை பி.எஸ்.பெரேரா மாவத்தை மற்றும் கௌனிமுல்லை அம்பகொட்டே பாதை ஆகியவைகளை புளொக் கற்கள் பொருத்தி அபிவிருத்தி செய்து மக்கள் உடைமையாக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் மேற்கண்ட கருத்தை தெரிவித்தார்.
அங்கு கருத்து தெரிவித்த உறுப்பினர் அவர்கள், புதிய அரசொன்று அமைக்கப்பட்டதும் அனைத்து விடயங்களையும் உடனடியாக செய்து கொள்ள வேண்டும் எனும் தேவை மக்களுக்கு ஏற்படுகிறது. வீடுகள், பாதைகள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் எனும் தேவை தோன்றுகின்றது. அதேபோன்று வேலைவாய்யப்புக்களும் உடனடியாக பெற்றுக் கொள்ள வேண்டுமெனும் தேவைப்பாடு தோன்றுகின்றது. இவைகள் அனைத்தையும் உடனடியாக எதிர்ப்hர்க்கிறார்கள். எனினும், நாங்கள் முறையான திட்டங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைகளின் கீழ் அரச விலைமனுக்கோரல் விதிமுறைகளுக்கு ஏற்ப கடந்த வருடத்தில் அபிவிருத்தி வேலைகளை ஆரம்பித்தோம். கடந்த வருடத்தில் ஒவ்வவெரு கிராம சேவையாளர் பிரிவிலும் ரூ.10 இலட்சம் பெறுமதியான கருத்திட்டங்களை தொடங்கி 5 வருட வேலைதிட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்திக் கொண்டு வருகிறோம்.
புதிய அரசு அமைக்கப்பட்டு ஒரு வருட காலத்தினுள்; 1200 மில்லியன் ரூபாய்களை நட்டஈடாக வழங்கியுள்ளோம். வெள்ளத்தினால் மக்கள் மிகவும் அதிகமாகவே பாதிக்கப்பட்டார்கள். தாங்கள் சம்பாதித்வைகளை இழந்ததால் மக்கள் என் மீது நன்றாக வசை பாடினார்கள். முன்னர் போன்று நான் ஏசியவர்களை வெள்ளை வானிலோ அல்லது டிபெண்டரிலோ கடத்தவில்லை. மக்கள் ஊடகங்களில் தங்களது கருத்துக்களை சுதந்திரமாக தெரிவித்தார்கள். அது மக்களுக்கேற்பட்ட துன்பத்தினால் ஏற்பட்ட வேகம். நாங்கள் ஜனநாயக ரீதியாக செயற்படுவோமானால் அவைகளுக்கு முகங்கொடுக்க இயலுமாய் இருத்தல் வேண்டும்.
இப்பொழுது மக்களுக்கு போதியளவில் ஜனநாயக சதந்திரம் கிடைத்துள்ளது. ஜனாதிபதியை அவமதிக்கும் விதத்தில் அண்மையில் நடைபெற்ற போட்டியொன்றில் ஒருவர் பதாகையொன்றை காட்சிப்படுத்திக் கொண்டிருந்தார். அவரை முன்னரைப் போன்று நாங்கள் வெள்ளை வானில் கடத்தவில்லை. அவரது கால்களை உடைக்கவுமில்லை. அவரை கொல்லவுமில்லை. இவ்வாறானதொரு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்துள்ளதனால் 'நீங்கள் மகிழ்ச்சியாக உள்ளீர்களா?' என கேட்கக் கூடியதாக உள்ளது. மஹிந்த அவர்கள் வேறுமொரு அர்த்தத்திலேயே 'நீங்கள் மகிழ்ச்சியாக உள்ளீர்களா?' எனக் கேட்கிறார். ஏனெனில், மக்கள் துன்பப்படுவதை அவர் விரும்புகிறார்.
அதேபோன்று, ஒருவர் முதன்முறை சிறை சென்று வெளியே வரும்போது நாட்டின் அனைத்து பிரதேசங்களிலிருந்து மக்களை அழைத்து வந்து அவர்கள் முன்னிலையில் வீரனைப் போல் வெளியே வந்தார். சில நாட்களுக்கு முன்னர் இரண்டாவது முறை சிறை சென்ற அவர் நாய்க் குட்டியொன்றைப் போன்று வெளியே வந்தார். ஏனெனில் மக்களுடைய உண்மையான பிரச்சினைகளுக்காக போராடி இவர் சிறை செல்லவில்லை என்பதை மக்கள் தற்பொழுது உணர்ந்து கொண்டார்கள். ரத்துபஸ்வலை மக்களுக்கு தண்ணீர் கேட்டு போராடியதற்காகவோ, பல்கலைகழக மாணவர்களின் பிரச்சினைகளை தீர்ப்தற்காகவோ, கடற் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கவோ அல்லது தொழிலாளர்களின் உரிமைளை வென்றெடுப்பதற்காகவோ இவர் போராடி சிறை செல்லவில்லை. தான் களவாடியமை கண்டு பிடிக்கப்பட்டமையால் இவர் சிறை செல்ல நேரிட்டது. ஆதலால் இவைகளை கவனத்திற் கொள்ள தேவையில்லை. எனவே, நாங்கள் எமது பயணத்தை தொடருவோம்.