எமது பிரதேச வீரர்கள் சர்வதேச சாதனையாளர்களாக திகழ வாய்ப்புக்கள் வழங்கப்படும் -பிரதி அமைச்சர் ஹரீஸ்

அகமட் எஸ். முகைதீன், ஹாசிப் யாஸீன்-
மது பிரதேச விளையாட்டு வீரர்கள் தேசிய அணியில் இடம்பெற்று சர்வதேசசாதனையாளர்களாக திகழ வைக்க பல்வேறு முன்னெடுப்புக்களை செய்து வருகின்றேன் எனவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

நிந்தவூர் முத்தகீன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முத்தகீன் மென்பந்துகிரிக்கெட் சமர் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி நிகழ்வு நேற்று நிந்தவூர் அஷ்ரஃப்ஞாபகார்த்த மைதானத்தில் இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் சம்மாந்துறை யுனிடிவிளையாட்டுக் கழகத்தை எதிர்த்து நிந்தவூர் லகான் விளையாட்டுக் கழகம் மோதியது.இப்போட்டி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர்,விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ.பாவா,எம்.எம்.றினோஸ், வெளிவிவகார செயலாளர் எம்.ஏ.ஜின்னா, விளையாட்டு உத்தியோகத்தர்எம்.எச்.எம்.அஸ்வத் என பலரும் கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்து பிரதி அமைச்சர் உரையாற்றுகையில்,

இலங்கைக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருக்கின்ற அவுஸ்திரேலியா கிரிக்கெட்அணியை 16 வருடங்களுக்கு பின்பு எமது நாட்டு அணி டெஸ்ட் தொடரில் மூன்றுபோட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இது இந்த நாடு கிரிக்கெட் துறையில்பெற்றிருக்கின்ற வளர்ச்சியை பறைசாற்றுகின்றதாக அமைகின்றது. இவ்வாறு இலங்கையில்கிரிக்கெட் விளையாட்டுதுறை உச்ச கட்டத்தை அடைந்துள்ளதையிட்டு விளையாட்டுத்துறைபிரிதி அமைச்சர் என்ற வகையில் பெருமிதமடைகின்றேன்.

கிரிக்கெட் விளையட்டுத்துறைக்கு எமது நாட்டிலும் சர்வதேசத்திலும் சிறப்பிடம் இருப்பதைஅவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இதன் காரணமாக தேசிய அணியில் வீரர்கள்விளையாட வேண்டும் என ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக எமது மண்ணின்விளையாட்டு வீரர்களும் தேசிய அணியில் இடம்பெற்று சர்வதேச சாதனையாளர்களாக திகழவேண்டும் என்ற அவா எல்லோரிடத்திலும் காணப்படுகின்றது.

இவ்வாறான சுற்றுப்போட்டிகளை நடத்துவதன் மூலம் எமது வீரர்களுடைய திறமைகளைவெளிக்கொண்டு வருவதோடு அவர்களின் விளையாட்டுத் திறணை மேன்படுத்துவதற்கும்சந்தர்ப்பம் வழங்குவதாக அமையும். எனவே இவ்வாறான சுற்றுப்போட்டிகளை நடத்திவீரர்களுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்.

கிரிக்கெட் நிறுவனத்துடன் எனது அமைச்சு இணைந்து கிழக்கு மண்ணில் கிரிக்கெட்துறையினை வளர்ச்சியடையச் செய்வதற்காக பல திட்டங்களை உருவாக்கி வருகின்றோம்.அவ்வாறான திட்டங்களை நடைமுறைப் படுத்துகின்றபோது நிச்சயமாக சிறந்த வீரர்களைஎமது பிரதேசத்தில் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. இதன்மூலம்எதிர்காலத்தில் தேசிய அணியில் எமது வீரர்களும் இடம்பெறுவதற்கு வாய்ப்பளிக்கும்.அதுமட்டுமல்லாமல் ஏனைய விளையாட்டுதுறைகளையும் எமது பிரதேசத்தில்வளர்ச்சியடையச் செய்வதற்காக பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களை எமதுபிராந்தியத்தில் நான் அமைச்சை பொறுப்பெடுத்த காலம் முதல் மேற்கொண்டு வருகின்றேன்.

எமது பிராந்தியத்தில் காணப்படுகின்ற மைதானங்கள் முழுமைப்படுத்தப்படாதமைதானங்களாக காணப்படுகின்றன. அவற்றினை நிவர்த்தி செய்வதற்காக இன்று ஒவ்வொருபிரதேசத்திலும் நிதிகளை ஒதுக்கீடு செய்து மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கானநடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அந்த வகையில் நிந்தவூர் அஷ்ரஃப் ஞாபகார்த்தபொது மைதானத்தை நிந்தவூர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் தாஹிரின்வேண்டுகோளுக்கமைவாக அபிவிருத்தி செய்வதற்காக எமது அமைச்சின் மூலம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நிந்தவூர் பிரதேசசெயலகத்தினால் முன்னெடுக்கப்படும்.

இப்பிராந்தியத்தில் காணப்படுகின்ற சகல மைதானங்களையும் அபிவிருத்தி செய்கின்றகடமை எனக்கிருக்கின்றது. அந்த வகையில் எதிர்காலத்தில் இப்பிராந்தியத்தில்காணப்படுகின்ற சகல மைதானங்களும் அபிவிருத்தி செய்யப்படும். நிந்தவூர் பிரதேசம்கிரிக்கெட் துறையில் பல புகழ் பெற்ற விளையாட்டுக் கழகங்கள் இருக்கின்ற பிரதேசமாகும்.எதிர்காலத்தில் உங்களுடைய விளையாட்டுத்துறை மேலும் வளர்ச்சியடைய பக்க பலமாகஇருப்பேன் என்று கூறிக்கொள்வதோடு இப்போட்டியில் வெற்றி பெற்ற லகான் விளையாட்டுக்கழக வீரர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -