ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீடக் கூட்டம் நேற்று (23) இரவு 8.00 மணியளவில் கட்சியின் தலைமையகமான தாறுஸலாமில் கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கட்சியின் செயலாளர் எம்.ரீ.ஹசன் அலி கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் உட்பட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விடயங்கள் பாராளுமன்றத் தேர்தல் மறுசீரமைப்பு விடயங்கள் கட்சியின் யாப்பு மாற்றம் மற்றும் கட்சி கிளைகள் புனரமைப்புத் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டன.
பின்னர் தாறுஸலாம் விடயம் தொடர்பாக கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் ,நிஸாம் காரியப்பர் ,கிழக்கு முதல்வர் ஹாபிஸ் நஸீர் அஹமட், சபீக் ராஜாப்தீன் மற்றும் சட்டத்தரணி பாயிஸ் உள்ளிட்டோர் தாறுஸலாம் தொடர்பான வரவு செலவு கணக்கறிக்கையினை இதன் போது தெளிவாக முன்வைத்தனர்.
பின்னர் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களால் இங்கு முன் வைக்கப்பட்ட தாறுஸலாம் தொடர்பான கணக்கறிக்கையில் யாருக்கும் ஏதாவது சந்தோகம் உள்ளதா இருந்தால் கேளுங்கள் விளக்கம் தருகின்றேன் என உயர்பீட உறுப்பினர்களைப் பார்த்து கேட்டுக் கொண்டார்.
அப்போது சபையில் உள்ள உயர்பீட உறுப்பினர்கள் நாங்கள் தலைமையையும் கட்சியையும் பூரணமாக நம்புகின்றோம் என உரத்த குரலில் கூறினர்.
பின்னர் தாறுஸலாம் தொடர்பாக பிழையான தகவல்களை ஊடகங்களுக்கு அறிக்கை விடும் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தை கட்சியை விட்டு உடனடியாக இடை நிறுத்தம் செய்ய வேண்டும் என உயர்பீட உறுப்பினர்கள் ஆவேசத்துடன் கூச்சலிட்டனர்.
இதன் போது கட்சியின் தலைவரினால் சபை சாந்தப்படுத்தப்பட்டு கட்சியின் தவிசாளருக்கு தலைவரால் ஆறுதல் வழங்கப்பட்டு பின்னர் உயர்பீட உறுப்பினர்களை தலைவர் சாந்தப்படுத்தி தவிசாளர் விடயம் இன்று தேவையில்லை எனக் கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
தலைவரினால் அன்பு காட்டப்பட்ட காரணத்தினால் தாவிசாளர் பாசீர்சேகுதாவூத் உயர்பீட உறுப்பினர்களின் நடவடிக்கைகளிலிருந்து தப்பி பிழைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை விடுத்து ஒவ்வொருவரும் தனக்கு ஏற்றால்போல் பொய்களையும், வதந்திகளையும், இன்னும் பல குப்பைகளையும் கொட்டுகின்றனர். எனவே நடந்தவற்றை நடந்தவாறு கூறுவதே சிறப்பு.
செய்திக்கு நன்றி.
செய்திக்கு நன்றி.