சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 36வது ஆண்டு நிறைவை முன்னிட்டுசம்பியன் கிண்ண கிறிக்கட் போட்டி நாளை (13) சனிக்கிழமை மாலை 2 மணிக்கு சாய்ந்தமருதுவொலிவேரியன் பொது மைதானத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் காரைதீவு விளையாட்டுக்கழகத்தினருக்கும் இடையில் நடைபெறும் மேற்படி போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாகஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல்அமைச்சருமான றவூப் ஹக்கீம் அவர்களும் கௌரவ அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணிஎச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் சிறந்த விளையாட்டுக் கழகங்கலான மேற்படிகழகங்களுக்கிடையில் நடைபெறும் குறித்த போட்டி நிகழ்வு பலப் பரீட்சை மிக்கதாகஅமைவதோடு விறுவிறுப்பானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே சமயம் சாய்ந்தமருது பிரதேசத்தில் மற்றுமொரு நிகழ்வான 'வீட்டுக்கு வீடு மரம்' நடுகைநிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் தலைமையில் அஷ்ரஃப் ஞாபகார்த்தபேரவை ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்விலும் அமைச்சர் றவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொள்வதுடன்நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் கல்முனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நீர்உந்தும் நிலைய திறப்பு விழா நிகழ்விலும் அமைச்சர் ஹக்கீம் கலந்து கொள்ளவுள்ளார்.