மூத்த ஊராம் மூதூர் என்று சொல்லுவார்கள் ஆனால் வரலாற்றில் என்றுமே இவர்கள் வாரி வழங்குபவர்களாக மாத்திரமே உள்ளார்கள் என்று மூதூர் மகன் கதைக்கின்றார்களோ என்னமோ எமது அயல் ஊர் சகோதரர்ககள் கதைப்பார்கள். இந்த வரலாறுதான் இற்றைவரை கற்களினால் செதுக்கப்பட்ட சிற்பம் போல அழியாமல் இன்னும் உயிர்வாழ்கின்றது.
இவர்கள் அரசியல் ரீதியாக ஒன்றுபட வேண்டிய தேவை காலத்தின் கட்டாயமாக மாற்றப்பட்டுள்ளது . இன்றைய சூழலில் கட்சிகள், நிறங்கள் இயக்கங்கள் என்பன மறந்து ஒரே கூடையின் கீழ் ஒன்றுபட்டு அரசியல் ரீதியாக இந்த சமூகம் ஒரு விடிவைக்காண வேண்டும். எது எவ்வாறாக இருந்தாலும் இன்றைய மூதூரின் அரசியல் அன்மைக்கால போக்கு எதிர்கால அரசியலை சீர்குழைத்து விடுமோ என்ற அச்சம் படித்தவர்கள் தொடக்கம் பாமர மக்கள் வரைக்கும் இருந்து கொண்டிருக்கின்றது.
பொதுவாக மூதூரில் இனி கடந்த காலத்தை மறந்து புதிய மூதூரை உருவாக்கும் பயணத்தில் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றினைந்து இஸ்லாமிய அமைப்பிலோ அல்லது கூட்டு கட்சியமைப்பிலோ அல்லது சூறா அமைப்பிலோ ஒன்றினைந்து பாராளுமன்ற தேர்தலாக இருந்தால் என்ன மாகாணசபைத் தேர்தலாக இருந்தால் என்ன பிரதேச சபைத் தேர்தலாக இருந்தால் என்ன கசப்பான உணர்வுகளை மறந்து கட்சிக்குள் இருக்கும் முரண்பாடு அல்லது கட்சிகளுக்கிடையில் இருக்கும் முரண்பாட்டை மறந்து காலத்திற்கு ஏற்ற வேட்பாளர்களை களமிறக்க வேண்டும்.
இவர் ஒட்டுமொத்த மூதூர் அபிவிருத்திக்கு தன்னை அர்ப்பணிப்பவராக இருக்கவேண்டும் என்பது கட்டாயமனது.
ஒருவரை வேற்பாளராக களமிறக்குவதும் அவரை வெற்றிபெற வைப்பதும் அவர்களுடன் ஏற்படுகி்ன்ற முரண்பாட்டினால் அவரிடம் உள்ள கோபத்தினை தீர்ப்பதற்காக இச்சமூகத்தினை பின்னர் சந்தையில் விற்பனை செய்வதும் மாற்றியமைக்க வேண்டும் அல்லது வேற்பாளராக நியமிக்கின்ற போது எல்லா விடயங்களையும் ஆராய்ந்து வேற்பாளரை நியமிக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோல்.
கட்டுரை றபீக் சர்றாஜ்,
மூதூர்.