பாறுக் ஷிஹான்-
தனியார் பேருந்துடன் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதால் இளைஞன் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று (24) காலை 8 மணியளவில் சாவகச்சேரி பேருந்து தரப்பிடத்திற்கு அண்மையில் இடம்பெற்றது.
யாழ்க்காணத்தில் இருந்து சாவகச்சேரி பகுதியை நோக்கி தனியார் பேருந்து சென்ற போது கொடிகாமம் பகுதியில் இருந்து யாழ் நகரை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பேருந்துடன் மோதியது.
இதனால் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த இளைஞன் தூக்கி வீசப்பட்ட நிலையில் குறித்த சைக்கிள் பேருந்தின் சில்லுக்குள் மாட்டியமை குறிப்பிடத்தக்கது.
உடனடியாக தடுப்பை பிரயோகித்த பேருந்து சாரதி உயிரிழப்பை தடுத்ததுடன் காயமடைந்த இளைஞனை வைத்தியசாலைக்கு அனுமதிக்க மக்கள் முயற்சி செய்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சாவகச்சேரி பொலிஸார் விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டனர்.