2500 ரூபா வழங்க கோரி பாரிய ஆர்ப்பாட்டம்..!

க.கிஷாந்தன்-
தேயிலை சபை மற்றும் தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கும் சென்.கூம்ஸ் தோட்ட தொழிலாளர்களுக்கு இடைக்கால கொடுப்பனவான 2500 ரூபாய் இரண்டு மாதங்களாக வழங்கப்படவில்லை என அத்தோட்ட தொழிலாளர்கள் தோட்டத்தை நிர்வகித்து வரும் அதிகாரிகளை முற்றுகையிட்டதோடு வாகனங்களையும் மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இவ் ஆரப்பாட்டம் 24.08.2016 அன்று காலை 9 மணியளவில் சென்.கூம்ஸ் தோட்ட காரியாலயத்திற்கு முன்பதாக இடம்பெற்றது.

இதில் இத் தோட்டத்தை சேர்ந்த சுமார் 500 தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இவ் ஆர்ப்பாட்டத்தின் போது தோட்ட தொழிலாளர்கள் ஏனைய கம்பனி நிர்வாகங்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் சலுகைகள் அடிப்படையில் எமக்கும் இடைக்கால கொடுப்பனவு 2500 ரூபாய் வீதம் இரண்டு மாதங்களுக்கான கொடுப்பனவை வழங்க வேண்டும் என வழியுறுத்திள்ளனர்.

அதேவேளை சென்.கூம்ஸ் தோட்டம் தேயிலை சபை மற்றும் தேயிலை ஆராய்ச்சி நிலையம் பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சின் கீழ் வழிநடத்தப்பட்டு வருகின்றது. ஆகையினால் ஏனைய கம்பனி தோட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால கொடுப்பனவு பட்டியலில் எமது தோட்டம் உள்வாங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் தோட்ட அதிகாரி லக்ஸ்மன் ஜெயதிலக்கவிடம் வினாவிய போது,

மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக முதலில் ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தெரிவித்தோம் மிகுதி தொகையினை இரண்டு வாரங்களில் வழங்குவதாக கூறினோம். இதில் உடன்பாடு இல்லாத தொழிலாளர்கள் எமது காரியாலயத்தையும் வாகனங்களையும் முற்றுகையிட்டு ஆரப்பாட்டம் செய்தனர். இதன்போது மேலதிகரியான தேயிலை ஆராய்ச்சி நிலைய ஆணையாளர் கலாநிதி. சரத் அபேசிங்கவிடம் கலந்தாலோசித்து இது தொடர்பில் தேயிலை சபை மற்றும் அமைச்சின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டது. இதன்பின்னர் இடைக்கால கொடுப்பனவாக 2500 ரூபாவை 25.08.2016 அன்று மாதாந்த முற்பணத்தோடு வழங்க முடிவுகள் செய்யப்பட்டுள்ளது.

இது ஒரு மாதத்திற்கான இடைக்கால கொடுப்பனவாகும். மேலும் 2500 ரூபாவை இரண்டு வாரங்களுக்கு பின் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் ஊடகவியலாளர்களிடமும் மக்களிடமும் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். எனினும் மதியம் வழமையான தொழிலுக்கு செல்வதாக தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது லிந்துலை பொலிஸார் ஸ்லத்திற்கு விரைந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -