அமீர் அலி என்னும் பெயரை உடனடியாக நீக்க வேண்டும் - முகைதீன்பாவா

றாவூரில் இருக்கும் ஆயுர்வேத வைத்தியசாலையில் இருக்கும் அமீர் அலி என்னும் பெயரை உடனடியாக அங்கிருந்து நீக்குமாறு வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர் யூ.எல்.முகையதீன் பாவா தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற ஏறாவூர் ஆயுர்வேத வைத்தியசாலையின் புதிய கட்டடத்துக்கான அடிக்கல்வைக்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அங்கு உரை நிகழ்த்திய முகையதீன் பாவா குறிப்பிட்டதாவது:

ஏறாவூரில் இருக்கும் ஒவ்வொரு அரசாங்க கட்டிடத்திற்கும் ஒவ்வொருவரினுடைய பெயர்களை வைத்துள்ளனர். இப்படியே விடமுடியாது. இவ்வூரின் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அமீர் அலியின் பெயரை வைக்க வேண்டிய தேவையில்லை. எனவே உடனடியாக அப்பெயரை நீக்கிவிட்டு எறாவூர் ஆயுர்வேத வைத்தியசாலை என்ற பெயரை வைக்குமாறு இங்கு கூடியிருக்கும் மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் முன்னிலையில் கோரிக்கை விடுக்கிறேன் என கோரிக்கை விடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -