நுவரெலியா உயர் நீதிமன்றம் : ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேருக்கு மரண தண்டனை

க.கிஷாந்தன்-
நுவரெலியா உயர் நீதிமன்றம் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து 05.08.2016 அன்று தீர்பளித்துள்ளது. 2004.02.01ஆம் திகதி இரவு நடந்த கொலை சம்பவம் தொடர்பிலேயே இவர்களுக்கு எதிராக மரண தண்டனை விதித்து நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க, தீர்பளித்துள்ளார்.

நுவரெலியா இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தபளை கொங்கோடியா தோட்டத்தை சேர்ந்த பெரியசாமி அறிராம் என்பவருக்கும், தண்டனை விதிக்கப்பட்ட எழுவருக்கும் இடையில் மின்சார பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதனாலேயே குறித்த நபரை கத்தியால் தாக்கி கொலை செய்ததாக கொலை செய்யப்பட்டவரின் மனைவி 05.08.2016 அன்று சாட்சியமளித்துள்ளார். இதில், பழனியாண்டி முத்துராஜா, பழனியாண்டி அறிராம், பழனியாண்டி நீலமேகன், பழனியாண்டி சுப்பிரமணியம், நீலமேகன் கமலநாதன், நீலமேகன் பாலசந்திரன், சுப்பிரமணியம் விக்னேஸ்வரன் ஆகியோருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -