ஏ.எஸ்.எம்.ஜாவித்-
பாராளுமன்ற சுற்று வட்ட தியவன்ன ஓயா ஆற்றிலிருந்து பொலிஸார் சிறிய ரக கைத்துப்பாக்கி (பிஸ்டல்) ஒன்றை இன்று (30) நண்பகல் எடுத்துள்ளனர்.
கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் மேற்படி கைத்துப்பாக்கி எடுக்கப்பட்டுள்ளது. இராணுவ கேர்ணல் ஒருவர் குடும்பத்தகராறு காரணமாக தனது மணைவி மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு குறித்த துப்பாக்கியை மேற்படி ஆற்றில் வீசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த இராணுவ கேர்ணல் அத்துருகிரிய பொலிஸார் கைது செய்து பலத்த விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் படுகாயமடைந்த அவரது மனைவி கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தாய் என்றும் அவர் இசுரப்புர பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.