அக்கரைப்பற்று பிரதேச சபைக்கு புதிய விவாகப்பதிவாளர் நியமனம்..!

கே.சி.எம்.அஸ்ஹர்-
க்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களுக்கான முஸ்லிம் விவாகப்பதிவாளராக,79ஃ1பள்ளி வீதி பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த 'ஆதம் லெப்பை முகம்மது இப்றாஹிம் (மௌலவி)' அவர்கள் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டப்பிரகாரம் பண்பாட்டு அமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார். அக்கரைப்பற்றுப் பிரதேச சபை அமைக்கப்பட்டபின் நியமிக்கப்பட்ட முதல் விவாகப்பதிவாளர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மர்ஹும்களான ஆதம்லெவ்வை,மரியம் பீவி தம்பதிகளின் கணிஷ்டப் புதல்வாரன இவர் அக்கரைப்பற்றுத் தேசிய பாடசாலையின் பழைய மாணவராவார். இவர் தனது அல் ஆலிம் பட்டத்தை 'கண்டி ஹந்தஸ்ஸ லீமகஹ கொட்டுவ , பட்டுப்பிட்டிய ஷமின் ஹாஜியா அரபுக்கல்லூரியில் |கற்றுப்பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிட்த்தக்கது.

அக்கரைப்பற்று பள்ளிக் குடியிருப்பு பெரிய பள்ளி வாயல் பிரதம பேஸ் இமாமான இவர் திருமண வைபவம், சிரமதானம், இறப்பு, பிறப்பு நிகழ்வுகள் போன்றவற்றிலும் சமாதான சகவாழ்வு நிகழ்வுகளிலும் பெரும் பொதுசேவை செய்து வருகின்றார். பொதுமக்களோடு மிகவும் கௌரவமாகவும் கண்ணியமாகவும் நடந்து கொள்ளும் இவருக்கு இப்பதவி கிடைத்ததை இட்டு பிரதேச மக்கள் மகிழ்வடைந்துள்னர்.

அக்கரைப்பற்று பிரதேச சபைக்குத் தனியான விவாகப்பதிவாளர் நியமிக்கப்பட வேண்டும் என்ற எமது செய்திக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -