தமிழகத்தின் பொள்ளாச்சி அருகே ஆபாச படம் பார்த்த இளைஞன் ஒருவன் தன்னுடைய காம பசிக்கு 8 மாத குழந்தையை பலாத்காரம் செய்து கொடூரமாக அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கொண்டயன்பாளையம் கிராமத்தில் உள்ள தென்னை நார் தொழிற்சாலையில் 20–க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் தொழிற்சாலை பகுதியிலேயே கூடாரம் அமைத்து தங்கி உள்ளனர்.
அந்த தொழிற்சாலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி, தங்களின் 2 மகள்களுடன் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலையில் கணவன், மனைவி இருவரும் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது திடீர் என்று அந்த தம்பதியின் ஒரு வயது மகள் கதறி அழும் சத்தம் கேட்டது. உடனே அவர்கள் இருவரும் ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது குழந்தை, கூடாரம் அருகே கீழே கிடந்தது. குழந்தையின் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனே ஆம்புலன்சு மூலம் குழந்தையை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தனர். குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் , 8 மாத பெண் குழந்தை சரிதாவை யாரோ பாலியல் பலாத்காரம் செய்து இருக்கலாம் என்றும் அதனால் குழந்தை இறந்து இருக்கலாம் என்றும் தெரியவந்தது. இதையடுத்து குழந்தையின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து குழந்தையின் பெற்றோர் வேலைப்பார்க்கும் தென்னை நார் தொழிற்சாலை பகுதிக்கு சென்று பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சஞ்சித் (22) என்ற வாலிபரை தவிர அனைவரும் அங்கு இருந்தனர். இதையடுத்து பொலிசார் அந்த நபர் எங்கு என்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அந்த நபர் இரவு முதல் காணவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து பொலிசாருக்கு சஞ்சித் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரை தேடினர். அப்போது அவர் ரெயிலில் பீகார் செல்ல முடிவு செய்து பேரூந்திற்கு காத்திருந்தார். பொலிசார் அவரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர்.
அவனிடம் நடத்திய விசாரணையில் அவன், ஆபாச படம் பார்த்து சைக்கோவாக இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று தூங்கி கொண்டிருந்த 8 மாத குழந்தையை அந்த இளைஞன் தூக்கி சென்று பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். குழந்தை அழ ஆரம்பித்ததும் அதனை தரையில் ஓங்கி அடித்துள்ளான். இதனால் குழந்தைக்கு இரத்தம் வழிந்தோடியது. பின்னர் குழந்தையை படுக்கையில் போட்டுவிட்டு தப்பித்து ஓடியதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.