சிறுமி துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேரில் 3 பேர் விடுதலை..!

க.கிஷாந்தன்-
ட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா - தரவளை பகுதியில், துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் 13 வயது சிறுமி வைத்தியசாலை சிகிச்சைக்கென டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மாதம் 19ம் திகதி இடம்பெற்றதாக கூறப்படும் இந்த சம்பவத்தில் 13 மற்றும் 14 வயதுடைய ஐந்து சிறுவர்கள் தொடர்புபட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அட்டன் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் பெற்றோர்கள் 28.08.2016 அன்று அட்டன் பொலிஸாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் இவ் 5 சிறுவர்களையும் பொலிஸார் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். இதில் 2 சிறுவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் 3 சிறுவர்களை பொலிஸார் விசாரணையின் பின் விடுதலை செய்துள்ளனர்.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த சிறுவர்களை 29.08.2016 அன்று அட்டன் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரியவந்துள்ளது. சிறுமியிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இச்சிறுமியின் வைத்திய பரிசோதனை கிடைத்தபின் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

அதேவேளை சிறுமி துஷ்பிரயோகம் தொடர்பில் கையடக்க தொலைபேசி ஒன்று ஆதாரமாக கிடைத்திருப்பதாகவும், இதனை கொண்டும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அட்டன் பொலிஸ் தரப்பு மேலும் தெரிவித்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -