சுலைமான் றாபி-
கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் என்று கூறப்பட்டதையடுத்து நாளை (25) இடம்பெறும் கிழக்கு மாகாண சபையின் 62 வது சபை அமர்வில் பங்குபற்றவுள்ளார்.
இது சம்பந்தமாக அவரிடம் வினவியபோது :
கிழக்கு மாகாண சபையின் 62 வது சபை அமர்வில் பங்குபற்றுவதற்கான அழைப்பு தனக்கு கிடைக்கப் பெற்றுள்ளதோடு, இந்த சபை அமர்வு பற்றிய நிகழ்ச்சி நிரலும் அதனுடன் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்.
மேலும் மாகாணசபை தேர்தல் சட்டம் 63/1 ன் பிரகாரம் தன்னை நீக்கியதற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்துள்ள நிலைமையில். அவ்வழக்கு நிறைவடையும் வரை எந்த நடவடிக்கைகளும் தேர்தல் ஆணையாளரினால் எடுக்க முடியாது என்றும் தெரிவித்ததோடு நாளை இடம்பெறும் சபை அமர்வில் வக்பு சபையின் அமர்வுகள் கிழக்கு மாகாண சபையிலும் இடம்பெறவேண்டும் எனும் பிரேரணையும் தன்னால் முன்வைக்கப்படவுள்ளதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் மேலும் தெரிவித்தார்.
இதே வேளை கடந்த ஜுலை 13ம் திகதி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீரவினால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.