சப்னி அஹமட், பைஷல் இஸ்மாயில் -
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் 2017ஆம் ஆண்டிற்கான மாகாண செயற்றிட்ட திட்டமிடல் தொடர்பான கலந்துரையாடல் இன்று (24) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தலைமையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போது, 2017 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபை மேற்கொள்ளவுள்ள செயற்பாடுகள் பற்றியும், 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் பற்றியும் மிக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண உள்ளுடாட்சி சபைகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிடல்கள், சுகாதார, சுதேச செயற்பாடுகள் பற்றி ஆணையாளர்களுடன் பேசப்பட்டு அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட நிதிக்கையால்ள் பற்றியும் இதன்போது ஆராய்யப்பட்டது.
சுகாதார மேம்பாட்டிற்கு தேவையான காரணிகள் பற்றியும் வைத்தியசாலைகளுக்கான திருத்தப்பணிகள் கட்டுமானப்பணிகள் போன்றவற்றுடன் வைத்திய உபகரணங்களுக்கான நிதிக் கையால்கை பற்றிய கணக்கறிக்கையும் மிக விரிவாக ஆராயப்பட்டது.