உலகில் பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7வது இடம்..!

லகின் 10 பணக்கார நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவுக்கு 7-வது இடம் கிடைத்துள்ளது. நியூவ் வேல்டு வெல்த் என்ற அமைப்பு இந்த கணக்கெடுப்பை நடத்தி வெளியிட்டது. இதன்படி, உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதன் மொத்த தனிநபர் மதிப்பு 48,900 பில்லியன் டாலராக உள்ளது. பட்டியலில் 2-வது இடத்தில் சீனாவும், 3-வது இடத்தில் ஜப்பானும், 17,400 பில்லியன் டாலர் , 15,100 பில்லியன் டாலர் மதிப்பை முறையே பெற்றுள்ளன.

4-வது இடத்தை இங்கிலாந்து பெற்றுள்ளது. இதன் மதிப்பு 9,200 பில்லியன் ஆகும். இதைத்தொடர்ந்து 5-வது இடத்தில் ஜெர்மனி உள்ளது. பிரான்சு 6-வது இடத்தில் உள்ளது. இந்தியா 5,600 பில்லியன் டாலர்களுடன் 7வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் கனடா 8-வது இடத்திலும், ஆஸ்திரேலியா, இத்தாலி முறையே 9-வது மற்றும் 10 வது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபர்களின் சொத்து மதிப்பில் ஒரு நாட்டின் செல்வ வளம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக மக்கள்தொகை இருப்பதன் காரணமாக பண மதிப்பு மிகையாக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி மிக வேகமாக இருந்ததாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -