யாழ் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கான விஷேட நடமாடும் சேவை - 20 ஆகஸ்ட் 2016

என்.எம்.அப்துல்லாஹ்-
யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள்குடியேற விரும்புகின்ற யாழ்ப்பாண முஸ்லீம்களுக்கான விசேட நடமாடும் சேவை ஒன்று இம்மாதம் 20ம் திகதி சனிக்கிழமை யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியில், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மீள்குடியேற்ற பதிவுகளுக்கான நடமாடும் சேவையில் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறுகின்ற அனைத்து முஸ்லிம் மக்களையும் கலந்து பயன்பெறுமாறு கேட்கப்பட்டுள்ளனர். மீள்குடியேற்றப்பதிவுகளுக்கு ஒரு குடும்பத்திற்கு ஒருவர் என்ற அடிப்படையில் வந்து புதிய மீள்குடியேற்றப் பதிவுகளை மேற்கொள்ள முடியும்; அத்தோடு எவ்விதமான பதிவு நீக்கங்களோ வேறு ஆவணங்களோ கோரப்படமாட்டாது; பதிவு செய்யப்படவேண்டிய்வர்களின் அடையாள அட்டை, அல்லது பிறப்புச் சான்றுப்பத்திரம் மாத்திரம் போதுமானததாகும். மீள்குடியேற்றப்பதிவுகளோடு காணிகளுக்கான பதிவுகளும், வீட்டுத்திட்டங்களுக்கான பதிவுகளும், வாழ்வாதார உதவிகளுக்கான பதிவுகளும் மேற்கொள்ளப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். அனைத்து யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களையும் இந்நடமாடும் சேவையில் பங்கேற்று பயன்பெறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -