யோஷித்தவின் 158 மில்லியன் சொத்து அரசுடமையாகிறது..!

யோஷித்த ராஜபக்சவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் 158 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை அரசுடமையாக்குமாறு கடுவலை நீதவான் தம்மிக்க இந்திரபால இன்று உத்தரவிட்டுள்ளார்.

கால்டன் ஸ்போட்ஸ் நெட்வேர்க் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பணம் கிடைத்த விதத்தை வெளியிடவில்லை என்ற காரணத்தினால், பணச் சலவை சட்டத்தின் கீழ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யோஷித்த ராஜபக்சவின் நண்பர் எனக் கூறப்படும் ரொஹான் என்பவரின் வங்கி கணக்கை சோதனையிட்ட போது அதில் 158 மில்லியன் ரூபாவுக்கும் மேல் பணம் இருந்ததாகவும் அது தன்னுடைய பணம் அல்ல யோஷித்த ராஜபக்சவின் பணம் என ரொஹான் என்பவர் கூறியதாக பொலிஸார் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.

இதனையடுத்த குறித்த பணத்தை தொகையை அரசுடமையாக்குமாறு உத்தரவிட்ட நீதவான், யோஷித்த ராஜபக்சவின் சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் ரொஹான் வெலிவிட்ட, கவீஷான் திஸாநாயக்க, மருத்துவர் அஷான் பெர்ணாந்து, நிஸாந்த ரணதுங்க ஆகிய சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் 234 மில்லியன் ரூபா மூலதனத்தில் ஒரு பகுதி போலி கொடுக்கல் வாங்கல் மற்றும் சட்டத்திற்கு முரணான வகையில் போலி ஆவணங்கள் மூலம், சுங்கம் மற்றும் நிறுவன சட்டத்திற்கு முரணாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -