அத்து மீறி பிரவேசித்து தலையில் துப்பாக்கியை வைத்தார்கள் (VIDEO)

இக்பால் அத்தாஸ் தர்ஹாநகரை பிறப்பிடமாக கொண்டவர். சண்டே டைம்ஸ் பத்திரிகையின் புலனாய்வுத் துறை எழுத்தாளர். CNN, Times of London, Jane's Defense Weekly   போன்ற ஊடகங்களில் பணியாற்றி வருபவர். இலங்கை பாதுகாப்புத் துறையின் ஆயுத ஊழல்களை அம்பலப்படுத்தியவர். பல்வேறுபட்ட ஊடக விருதுகளை வென்றுள்ள இவர், மீள்பார்வை பத்திரிகைக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல் இங்கு தரப்படுகிறது.
சந்திப்பு - ஹெட்டி ரம்ஸி, அனஸ் அப்பாஸ்
உங்களது ஊடகத்துறை பிரவேசம் குறித்து சற்று விளக்க முடியுமா?
நான் ஒரு எழுத்தாளனாக ஐம்பதுக்கும் அதிகமான வருடங்களை கழித்துள்ளேன். ஆனாலும் ஆரம்பத்தில் எனக்கு ஊடகத்துறையில் இணைய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கவில்லை. அக் காலப் பகுதியில் ‘சன்’ என்றதொரு பத்திரிகை வெளியானது.
அதில் எனது உறவினரொருவர் லேக் ஹவுஸ் பிராந்திய செய்தியாளராக பணி புரிந்ததனால் எனக்கும் சன் பத்திரிகையில் பணிபுரியும் ஆர்வம் ஏற்பட்டது. அதில் செய்தியாளராக இருந்த பொழுது நான் கொழும்பு டெக்னிகல் கல்லூரியில் Sales Management பாடநெறிக்கு விண்ணப்பித்திருந்தேன். இப்பாடநெறி சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
இக்கல்லூரி சன் பத்திரிகை அலுவலகத்திற்கு அருகாமையில் இருந்தது. அக் காலப்பகுதியில் களுத்துரை கடுகுருந்த பிரதேசத்தில் பாரியதொரு மரம் இருந்தது. ஆங்கிலத்தில் அதை Banion Tree  என்பார்கள்.  அம்மரத்திற்கு  நடுவால் வாகனங்களும் செல்லும். இது வரலாற்று முக்கியத்துவமிக்கதொரு மரம். அம்மரம் உடைந்து விழுந்ததும் அது தொடர்பிலான தகவல் பெட்டகமொன்றை தொகுத்து சன் பத்திரிகை அலுவலகத்திற்கு ஒப்படைக்கச் சென்றிருந்தேன்.
அவ்வேளையில் அப்பத்திரிகையின் செய்தி ஆசிரியரான மஹிந்த ரணவீர என்னிடம் கேள்விகளை தொடுக்க ஆரம்பித்தார். இதை எவ்வாறு எழுதினீர்கள் என்றும் வினவினார். பின்னர் அவர் என்னை உட்கார வைத்துவிட்டு வெளியே சென்று என்னை சாடை காட்டி சிலரோடு உரையாடிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் என்னிடம் வந்து நீங்கள் என்ன செய்கிறீர்கள் என வினவினார். நான் தொழில்நுட்பக் கல்லூரியில் கற்றுக் கொண்டிருப்பதாகவும் வேறு வேலைகளுக்குச் செல்வதில்லை என்றும் கூறினேன்.
எமது அலுவலகத்திற்கு வந்து வேலைசெய்யுமாறு பணித்தால் உங்களுடைய பதில் என்னவாக இருக்கும் என்று கேட்டார். நாளைய தினமே ஆரம்பிப்போமா என்றார். அதற்கு நான் நாளைக்கு முடியாது துணிமணிகளைத் தயார்படுத்த வேண்டும் என்றேன். சில காலம் சுதந்திர ஊடகவியலாளராக பணியாற்றி விட்டு அதன் பின்னர் எமது அலுவலகத்தில் இணையலாம் என்றார்.
பணியில் இணைய எனக்கு ஒரு வார காலம் வேண்டும் என்றேன். அங்கிருந்து தான் நான் எனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தேன். நான் நினைக்கிறேன் அது 1966களின் துவக்கப் பகுதியென்று. நான் கூடுதலாக கொழும்பில் தங்கி நிற்கவில்லை. கொழும்பிலிருந்து செல்லும் கடைசிப் புகையிரதத்திலேயே பயணித்தேன். எனது சொந்த ஊர் தர்காநகர். அளுத்கமையிலிருந்து தர்கா நகருக்கு கால்நடையாகவே செல்வேன். மறுநாள் காலையில் 5 மணிக்கு எழும்பி வேலைக்குச் செல்ல வேண்டும்.
இவ்வாறு சில காலங்கள் கழிந்தன. அது சிறப்பான காலப்பகுதியென நினைக்கிறேன். அக்காலப்பகுதியில் கடுமையாக கஷ்டப்பட்டதனாலேயே எனக்கு தற்போதுள்ள நிலைக்கு வர முடிந்தது. அப்போது ஒரு வரி எழுதுவதற்கு நான்கு சதம் செலுத்தினார்கள். எனக்கு 19 ரூபா முதற் சம்பளமாக வழங்கப்பட்டது. எனது பயனத்திற்குரிய புகையிரத சீஸனின் விலை 24 ரூபா. சில காலத்தின் பின்னர் நான் கொழும்பில் வந்து தங்கினேன். சன் பத்திரிகையில் அலுவலக நிருபரானேன். பின்னர் செய்தி ஆசிரியரானேன்.
IMG_1596சில காலங்களின் பின்னர் இங்கிலாந்து சென்று 8 மாதங்களாக ஊடகவியல் பயிற்சிகளைப் பெற்றேன். அதன் பின்னர் இலங்கை வந்து சன் பத்திரிகையில் துணைப் பிரதம ஆசிரியராக பதவி வகித்தேன். அதன் பின்னர் சில காலம் அப் பத்திரிகையின் செய்திப் பிரிவில் தலைமை ஆசிரியராக பதவி வகித்தேன்.
இவ்வாறு சில காலங்களின் பின்னர் வெளிநாட்டு ஊடக நிறுவனங்களுடனும் இணைந்து பணியாற்றக் கூடிய வாய்ப்புகள் கிடைத்தன. United Press International Roiters  ஊடக நிறுவனத்தின் கொழும்பு செய்தியாளராக 18 வருடங்கள் பணிபுரிந்தேன். நான் இன்றும் CNN செய்திச் சேவையின் ஊடகவியலாளனாக செயற்பட்டு வருகிறேன். பல்வேறுபட்ட சர்வதேச சஞ்சிகைகளில் எழுதக் கூடிய வாய்ப்பு எனக்கு கிட்டியது. குறிப்பாக  Jane's Defense Weekly  இனை குறிப்பிடலாம், பாதுகாப்பு உலகின் பைபிள் என்று இச்சஞ்சிகை வர்ணிக்கப்படுகிறது. சன் பத்திரிகை மூடப்பட்டதன் பின்பு தான் நான் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் இணைந்து கொண்டேன்.
நான் சன் பத்திரிகையில் இணையும்பொழுது எனக்கு தமிழ்மொழி தெரியும் என்பதனால் தமிழ் அரசியல் கட்சிகள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு பணிக்கப்பட்டேன். அப்பொழுது இரண்டு அரசியல் கட்சிகள் மாத்திரமே காணப்பட்டன. ஒன்று பெடரல் கட்சி. மற்றையது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ். இக்கட்சிகள் வருடந்தோரும் மாநாடுகளை நடாத்தின. பெடரல் கட்சி நடாத்திய பல மாநாடுகளுக்குச் சென்று அக்கட்சிகளின் தலைவர்கள் பலரை அறிந்து கொண்டேன்.
இவ்விரு கட்சிகள் தொடர்பிலும் ஒரு புரிதல் என்னிடம் காணப்பட்டது. இவ்வாறுள்ள போது 1976இல் வட்டுக்கோட்டை  பிரகடனம் இடம்பெற்றது. அன்று தொடக்கம் யுத்தத்தோடு தொடர்பு பட்ட விடயங்கள் அரங்கேற ஆரம்பித்தன. இவ்விடயங்கள் ஆரம்பித்த முதல்நாள் தொட்டு யுத்தம் முடிவடையும் வரையில் நான் யுத்தம் பற்றிய விடயங்களை எழுதி வந்தேன்.
அப்போதைய அரசாங்கத்தினால் கிடைத்த அனுமதியின் பிரகாரம் வட பகுதிக்குச் சென்று இராணுவத்துடன் தங்கி நின்று அதன் பின்னர் புலிகளின் பிரதேசங்களுக்கும் சென்று அவர்களுடைய தலைவர்களுடனும் கலந்துரையாடினேன். எனவே இவ்விடயங்களை நான் சிங்கள பௌத்தர்களுக்குச் சொந்தமான பத்திரிகைகளிலே எழுதினேன். இதன் விளைவாக இருந்த நிலையை விடவும் யுத்தம் தொடர்பாக மக்களுக்கு கூடுதல் புரிதல் ஏற்பட்டது.
நான் முடியுமான அளவு கட்சி சார்பின்றியே எழுதினேன். கலை சினிமா விளையாட்டு போன்ற விடயங்களை பற்றி எழுதுவதை விடவும் இது கொடுமையானது. நாம் எப்படி எழுதினாலும் அதை ஜீரணித்துக் கொள்ளாத ஒரு சிலரும் உள்ளனர். அவர்கள் இதனை பிரிதொரு கோணத்திலேயே நோக்குகிறார்கள். இதனால் சில நெருக்கடிகளும் ஏற்படுகின்றன.
சீருடை அணிந்த சிலர் இருந்தார்கள். அவர்கள் போரின் மூலம் பிரயோசனம் பெற்றார்கள். யுத்தம் அவர்களுக்கு வியாபாரமாய் அமைந்தது. இத்திருட்டுச் செயல்களையும் மோசடிகளையும் பற்றிக் கூறும்பொழுது அவர்கள் அதற்கு  கோபப்பட்டு பழிவாங்கும் முகமாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். உதாரணத்திற்கு MIG 27 விமானக் கொள்வனவு தொடர்பிலான ஊழல் பற்றி எழுதிய போது எனக்கு தேசத் துரோகி என்ற பட்டத்தைச் சூட்டினார்கள்.
இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட 2006 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையில் எந்தவொரு அரசாங்கத்தினாலும் என்னை விசாரணைக்கு உட்படுத்தவில்லை. அவ்வாறு தவறுதலாக துரோகியாக செயற்பட்டிருந்தால் எனக்கு தண்டனை வழங்கியிருக்க வேண்டும். இதிலிருந்து நிரூபணமாகிறது என்னவெனில், உண்மையை ஜீரணிக்க முடியாத திருடர்களே இக்குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள் என்பது.
உண்மையை அம்பலப்படுத்த முடிந்தமை தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன். mig விமானக் கொள்வனவில் இடம்பெற்ற மோசடிகளை அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து நான் பல தடவைகளில் அச்சுறுத்தப்பட்டேன். எனக்கு மரண அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டன. எனக்கு நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது. பல மாதங்களாக தாய்லாந்தில் அடைக்கலம் பெற்றேன்.
சில காலங்களின் பின்னர் நான் இலங்கை வந்து சண்டே டைம்ஸ் பத்திரிகையில் அரசியல் எழுத்தாளர் என்ற பெயரில் எழுதி வருகிறேன். ஒரு சிலர் எனக்கெதிராக குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்த போதிலும் சட்டபூர்வமாக எனக்கு எவ்வித குற்றச்சாட்டுக்களும் இல்லை.
சண்டே டைம்ஸ் பத்திரிகையில்  நீங்கள் தொடராக பாதுகாப்புத் துறையுடன் தொடர்புபட்ட விடயங்களை எழுதி வந்தீர்கள். அதில் கூடுதலாக உள்ளகத் தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளீர்கள். உண்மைப்படுத்தப்பட்ட இவ்வாறான தகவல்களை அப்போது உள்ளேயிருந்து உங்களுக்கு யார் வழங்கியது? மிகவும் சிக்கலுக்குரிய காலப் பகுதியில் புலனாய்வுத்துறை ஊடகவியலாளராக எவ்வாறு உங்களால் மாத்திரம் செயற்பட முடிந்தது.?
இது நல்லதொரு கேள்வி. உதாரணத்திற்கு ஊழல் மோசடியை எடுத்துக் கொள்வோம். ஊழல் மோசடி தொடர்பில் இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒன்றில் நான் இது விடயம் தொடர்பில் எழுதும்போது தகவல்களை கையால் போட்டு எழுதியிருக்க வேண்டும். அவ்வாறு அச்சம்பவம் உண்மையாக இருந்தாலும் நான் சட்டத்தை சிதைத்ததாக குற்றம் சுமத்தப்படும். எனக்கு சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்குமாறு பணிக்கப்படும். அதில் MIG 27 விமானக் கொள்வனவு தொடர்பிலான விடயத்தை நோக்கலாம்.
அது போன்று சில காலங்களுக்கு முன்னர் விடுதலை புலிகள் அமைப்பு 81 mm ரக மோட்டார் குண்டுகள் 34,000 கொள்வனவு செய்தமை தொடர்பிலும் நான் எழுதிய விடயங்களையும் நோக்கலாம். மோசடிகளில் ஈடுபடுகின்ற பலர் இராணுவத்தில் உள்ளனர். அது போன்று உண்மையைச் சொல்ல விரும்புபவர்களும் அதில் உள்ளனர். நாட்டிற்காக நாம் வியர்வை சிந்தி உழைக்கும் பொழுது பல கோடி மக்கள் சொத்துக்களை மோசடிகளுக்கூடாக அனுபவிப்பவர்கள் பற்றி தகவல் சொல்ல விளையும் நல்லுள்ளம் கொண்டவர்களும் உள்ளனர். அவர்களே உண்மையான வீரர்கள். இது போன்ற மோசடிகள் இடம்பெறுவது தொடர்பில் மக்களை தெளிவுபடுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துவார்கள். எனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளமை தொடர்பிலும் அவர்கள்  தகவல்களை வழங்கினார்கள்.
புலிகளுக்கெதிரான யுத்தம் முடிவுற்றதும் நீங்கள் நாட்டை விட்டு வெளியேறினீர்களா?
 யுத்தம் முடிந்ததும் நான் நாட்டை விட்டு வெளியேறவில்லை. யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப் பகுதியிலேயே நான் வெளியேறினேன். 2008, 2009 காலப்பகுதிகளில்  நான் வெளிநாட்டில் இருந்தேன். இக்காலப்பகுதியிலும் நான் சில விடயங்களை எழுதினேன். ஆனாலும் உள்ளேயிருந்த அதிகாரிகள் சிலர் அதனை விரும்பவில்லை. நான் எழுதுகின்ற விடயங்கள் மொழி பெயர்க்கப்பட்டு புலிகளிடம் வழங்கப்படுவதாக இவர்கள் தெரிந்து கொண்டார்கள். அவர்கள் செய்துகொண்டிருக்கும் விடயங்கள் பற்றியே எழுதினேன்.
அதுவல்லாமல் குறித்த திகதியில் இராணுவத்தினர் யுத்தம் செய்யவுள்ளார்கள், குண்டுபோடவுள்ளார்கள் எனக் கூறவில்லை. எதிரிகள் எனது எழுத்தை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் சமூகத்தில் தீவிரவாத எண்ணம் படைத்தவர்கள் பாதுகாப்புத் துறையில் ஊழல் மோசடிகளில் ஈடுபடுபவர்கள் எனது எழுத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. புலிகளை முதல் எதிரியாகவும் ஊடகத்தை இரண்டாவது எதிரியாகவும் நோக்கினார்கள்.
ராஜபக்ஷ அரசாங்கம் உங்களை புலி ஆதரவாளர் என்று முத்திரை குத்தியது. அதற்குரிய காரணம் என்ன?
புலிகளுக்கு ஆதரவாக எழுதும் தேசத் துரோகி என்பதாக முத்திரை குத்தினார்கள். சமூகத்தில் இவ்வாறான பீதியை விதைத்து நான் எழுதுவதை நிறுத்தி  விட முயற்சித்தார்கள். பல குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்கள் அதற்கூடாக நான் இத்துறையை விட்டோடி விடுவேன் என நினைத்தார்கள். ஆனால அது நிகழவில்லை. சிறு சம்பவங்களுடன் சந்தேகமுடையவர்களை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள். ஆனால் அவர்கள் என்னை ஏன் கைது செய்யவில்லை. இவர் எழுதும் விடயங்களை நம்பலாம் என்றதொரு எண்ணம் அவர்களிடம் இருந்தது. களத்தில் நடக்கும் விடயங்களையே நான் எழுதினேன். வேறொரு சிந்தனையை ஏற்படுத்தவில்லை. எனவே இராணுவத்தினர் கள விடயங்களை எனது தகவலுக்கூடாக அறிந்து கொண்டார்கள்.
இலங்கையில் சமாதானம் அமைதி நிலவுகின்ற பொழுதும் பாதுகாப்பு அமைச்சு தொடர்ந்தும் பாதுகாப்புச் செலவீனத்தை உயர்த்தியே வருகிறது. இது வெறுமனே ஒரு அரசியலா? அல்லது உண்மையிலேயே பாதுகாப்புத்துறை ஆபத்துக்களை எதிர்கொள்கிறதா?
IMG_1595அதனை அரசியல் பிரச்சாரமாகவே பார்க்க வேண்டும். எமது இராணுவத்தின் தொகை பிரித்தானியாவை காட்டிலும் அதிகமாக உள்ளது. இராணுவத்தின் சேவைகள் அதிகரிக்கப்படுகின்றவே ஒழிய இன்னும் குறைக்கப்படவில்லை. இது இரண்டு பக்கத்தில் தாக்கம் செலுத்துகிறது. ஒன்று ஆயுதமேந்திக் கொண்டிருக்கும் இராணுவத்தினர் பாதையில் இருந்து கொண்டு மக்களை பரீட்சிக்கும் பொழுது மக்கள் மத்தியில் சந்தேகமும் அச்சமும் குடிகொள்ள ஆரம்பிக்கும். அடுத்தது பொருளாதார ரீதியிலும் நெருக்கடிகள் உள்ளன.
இராணுவத்தினருக்கு உணவு, உடை வழங்கி பராமரிப்பதற்கு கூடுதலான நிதித்தொகை செலவாகும். இதன் காரணமாக அரசாங்கம் இராணுவத்தினரை ஐ.நா.வுக்கூடாக வெளிநாடுகளுக்கு அனுப்பி பாதுகாப்புப் படையணியொன்றை உருவாக்கும் முயற்சியில் உள்ளது. அத்தோடு சர்வதேச அரசாங்கங்களோடு பேச்சுவார்த்தைகளை நடாத்தி இராணுவத்தை புனரமைக்கும் யோசனையிலும் அரசாங்கம் உள்ளது. ஆனால் இவற்றை செய்வதில் அரசாங்கம் மெத்தனப் போக்கை காட்டுகிறது. புதிய அரசாங்கம் வந்ததும் வடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவத்தின் பிரசன்னம் குறைவடைந்திருப்பதனை காண முடிகிறது.
சமீப காலமாக சர்வதேச ரீதியான சில ஆயுதக் குழுக்களின் ஊடாட்டங்கள் இலங்கையிலும் உள்ளதாக அவ்வப் போது கூறி வருகிறார்கள். உங்களுடைய அறிவுக்குட்பட்ட வகையில் இது யதார்த்தபூர்வமான விடயமா? இதுவொரு அரசியல் பூச்சாண்டியா? அல்லது உண்மையிலேயே இலங்கைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதா?
புலனாய்வுத்துறை தகவலின் படி 45 பேர் ஐஸிஸில் இணைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவல்ல பிரச்சினை. இலங்கையில் தீவிரவாதிகள் இருப்பதாக தர்க்க ரீதியில் எடுத்துக் கொண்டாலும் அரசாங்கம் அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது.  அதை நிறுத்துவது மாத்திரமல்ல புலிப் பயங்கரவாதம் உருப்பெற்றதனால் ஏற்பட்ட விளைவுகளைப் போல் முஸ்லிம் மக்களுக்கும் ஏற்படாமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
எனவே இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய பொறிமுறையொன்று அரசாங்கத்திடம் உள்ளதா என்பது சந்தேகத்திற்குரியது. புலனாய்வுத் துறையினர் குறிப்பிடும் அளவுக்கு 45 அளவிலான பயங்கரவாதிகள் இலங்கையிலிருந்து சென்றுள்ளார்கள் என்றால் இதற்குரிய காரணம் என்ன வேலையில்லாப் பிரச்சினையா அல்லது வேறு ஏதுமா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது. இன்னுமொரு வருட காலத்தில் இவர்களின் தொகை அதிகரிக்குமா என்பதையெல்லாம் பார்க்க வேண்டியுள்ளது. அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைகளில் அவதானம் செலுத்தியுள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
நீங்கள் நூலுருவாக்க முயற்சிகளில் ஈடுபடவில்லையா?
புத்தகமொன்றை எழுதுவதற்கு தயாராக இருந்தேன். அதற்குரிய இரகசிய ஆவணங்களை பெட்டியொன்றில் போட்டு வைத்திருந்தேன். எனக்கு  அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்த காலப் பகுதியில் எனது வீடு அடிக்கடி சுற்றி வளைக்கப்பட்டது. எனது வீடு சோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து குறித்த ஆவணங்களை தீயிட்டுக் கொளுத்தினேன்.
இலங்கையில்  Investigative Journalism தற்பொழுது எந்தளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது?
இலங்கை வளர்ச்சியடைந்து வரும் ஒரு நாடு. investigative journalism என்று சொல்லும் போது அது அதிகம் பணம் செலவழிக்க வேண்டியதொரு துறை. முன்பு இணையம், கையடக்கத்தொலை பேசிகள் காணப்படவில்லை. முன்பு நாம் தகவல்களை திரட்டுவதற்கு ஒருவரை சந்தித்து அவர் வாயிலாக விடயங்களைப் பெற்றோம். ஆனால் இன்றைய நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. சில ஊடகவியலாளர்கள் வேறு நபர்களுடைய ஆக்கங்களைப் பெற்று தங்களது பெயர்களை அதில் பதிவுசெய்து கொள்வார்கள்.
வசதிகளி ரந்தும் அவர்கள் வெளியே சென்று செய்திகளை சேகரிக்க விரும்புவதில்லை. நான் சன் பத்திரிகையில் இருந்த காலப் பகுதியில் எம்மிடம் ஒரு ஆட்டோ இருந்தது. ஒரு செய்தியாளரை நாம் அதில் குறைந்த பட்சம் ஐந்து பொலிஸ் நிலையங்களுக்காவது அனுப்புவோம். அங்கு சென்று பொலிஸ் சாஜனிடமுள்ள முறைப்பாடுகளை வாசித்து பதிவு செய்து வருமாறு கூறுவோம்.
ஆனால் தற்பொழுது அந்நிலை மாறியுள்ளது. இன்று பொலிஸ் நிலையங்களுக்கு எத்தனை ஊடகவியலாளர்கள் செல்கிறார்கள்? பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறும் விடயங்களையே பதிவுசெய்து கொள்கிறார்கள். இத்தகைய செயல்களால் ஊடகத் தொழிலின் தரம் குன்றியுள்ளது.
ஊழல் மோசடிகள் தொடர்பாக ராஜபக்ஷ மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. அதன் உண்மைத் தன்மைகள் என்ன?
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னரும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. டுபாய் தேசத்தில் கருப்புப் பணம் வைப்புச் செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்கள். தற்பொழுது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கழிந்துள்ளன. இக்குற்றச்சாட்டுக்கள் உண்மையா பொய்யா என்பதை பொது மக்களுக்கு தெளிவுபடுத்த அரசாங்கத்தால் முடியவில்லை. அரசாங்கம் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றுவதில் அர்த்தமில்லை. அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
நீங்கள் அரசாங்கத்தின் பக்கமுள்ள பலங்களை பற்றி எழுதியது மிகவும் குறைவு. போரின் இறுதிக் கட்டத்திலும் புலிகள் பலம் என்றே நீங்கள் எழுதினீர்கள். இவ் உண்மை நடைமுறை யதார்த்தத்திற்கு முரணாக அமைந்தது. புலிகள் குறித்த உங்களது இறுதிக்கால ஊகங்கள் சரியாக அமையவில்லை. இது தொடர்பில்...
IMG_1594அது ஒரு கருத்து. அரசாங்கத்தின் ஆயுத கொள்வனவு தொடர்பில் எழுதினேன். அது இராணுவத்துடன் தொடர்புபட்ட விடயம். புலிகள் பலம் பொருந்தியதொரு அமைப்பு என்பதை நான் பல தடவைகளில் தெளிவுபடுத்தியுள்ளேன். எமது அரச தலைவர்களுக்கு ஏன் சமாதான பேச்சுவார்த்தைகளுக்குச் செல்ல நேர்ந்தது. அவர்கள் பலமில்லையென்றிருந்தால் ராஜபக்ஷவுக்கு முந்திய கால அரச தலைவர்களுக்கு புலிகளை அழித்திருக்கலாம். பலம் என்பதனாலேயே அடிக்கடி சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குச் செல்ல நேர்ந்தது.
புலிகள் அமைப்பை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். அவர்கள் சம்பிரதாய படையணியொன்றல்ல. இராணுவம் சம்பிரதாய படையணியாகும். புலிகளுக்கு சம்பிரதாய இராணுவமாக மாற முடியாது. சம்பிரதாய யுத்தமொன்றுக்குள் பிரவேசிக்க வேண்டுமென்பது இலகுவானதல்ல. உறுப்பினர்களை அவர்களுக்கு அதிகரிக்க வேண்டியிருந்தது. வீடு வீடாக சென்று உறுப்பினர்களை இணைத்துக்கொண்டார்கள். யுத்தத்தை வெற்றிகொள்ள சரத் பொன்சேகாவே காரணமாக இருந்தார். அவரிடம் யுத்த தந்திரம் காணப்பட்டது.
உங்களுக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல்கள் குறித்து..
யுத்தம் இடம்பெற்று வந்த காலப் பகுதியில் எனக்கு பல வழிகளில் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டன. ஒரு தடவை சிலர் எனது வீட்டுக்குள் அத்து மீறி பிரவேசித்து தலையில் துப்பாக்கியை வைத்தார்கள். என்னைக் கொல்ல முற்பட்டபோது இங்கிருந்த சிலர் கூக்குரலிட்டு அதைத் தடுத்தார்கள். விமானப் படையை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டார்கள். இவ்வரசாங்கம் அவர்களை விடுதலை செய்தது.
ஊடகத்துறையில் பிரகாசித்து வரும் இளம் ஊடகவியலாளர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் ஆலோசனைகள் என்ன?
எந்தவொரு சக்திக்கும் அடிமைப் படாமல் பக்கச்சார்பின்றி துணிச்சலாக நின்று உண்மையை கூறுங்கள். எந்த வொரு விடயத்தையும் தொடர்ந்து வாசியுங்கள். எந்தவொரு விடயத்தை பற்றியும் ஆழமாக ஆராய வேண்டும், குட்டையை கிளர வேண்டும். அப்போது எமக்கு ஏதாவது ஒரு விடயம் பற்றிய  தெளிவு கிடைக்கும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -