எதிர்கால சந்ததியினருக்கு கட்சியின் முக்கியத்துவத்தை எடுத்துச்செல்வது தொடர்பான கூட்டம் கண்டியில்..!

அபூ அலா -
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னோக்கிய பயணத்தை தொடர்வதற்கும், எதிர்கால சந்ததியினருக்கு கட்சியின் முக்கியத்துவத்தை எடுத்துச் செல்வது தொடர்பான கூட்டம் இன்று (24) கண்டி கடுகஸ்தோட்ட நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலில் மு.காவின் தலைவர் அமைச்சர் றஊப் ஹக்கீம் உரையாற்றுகையில்,

தேசிய ரீதியாக நாம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டுக்கு வீடு மரம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த நடமாடும் சேவையை எவ்வாறு முன்னெடுப்பது அதற்கான வழிவகைகளை எந்த முறையில் கொண்டு செல்லல்வேண்டும் என்பது தொடர்பாக விளக்கமளித்தார்.

இதனைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -