ஹாசிப் யாஸீன்-
புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானம் எதிர்வரும் 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்டு இம்மைதானத்தினை திறந்து வைக்கவுள்ளார்.
மேலும் இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, நகர திட்டமிடல், தேசிய நீர்வழங்கல் அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப்ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின்பெனார்ன்டோ, மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் உள்ளிட்ட அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த வெபர் மைதானமானது விளையாட்டுத்துறை அமைச்சின் 17 கோடியே 50 இலட்சம் ரூபா செலவில்புனரமைக்கப்பட்டுள்ளது.
400 மீற்றர் ஓடுபாதை, நீச்சல் தடாகம், உள்ளக அரங்கு, பார்வையாளர் அரங்கு முதலிய வசதிகள் இங்குஏற்படுத்தப்பட்டுள்ளது.