நுரைச்சோலை வீட்டுத்திட்டம் தொடர்பில் நமது செய்தியாளர் கேட்ட கேள்விக்கு ஜாதிக ஹெல உறுமயவின் பதில்

அஷ்ரப் ஏ சமத்-


மேல்மாகாண சபை உறுப்பிணரும் கட்சியின் அமைப்பாளா் மற்றும் செயலாளா், நிசாந்த வர்ணசிங்க -மற்றும் கட்சி அரசியல் உறுப்பிணா்கள் -

கேள்வி அஷ்ரப் ஏ சமத் - 

கடந்த 2007ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று நுரைச்சேலையில் சவுதி அரசினால் கொண்டுவரப்பட்ட 500 வீடுகள் திட்டத்தினை உங்களது கட்சி எதிா்த்து அதி உயா் நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்தீா்கள். தற்போது அந்த வீடமைப்புத் திட்டம் எந்தவொரு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரயோசனமற்று கடந்த 10 வருடமாக காடுகளாகி வீடுகளும் சேதமடைந்துள்ளது ?


பதில் - நிசாந்த வர்சிங்க - கெல உருமைய கட்சியின் அமைப்பாளா்

அக்கரைப்பற்று காணி இல்லை - அது தீகவாபி புமிக்கருகில் தான் இந்த வீடமைப்புத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. முஸ்லீம்களை மட்டும் குடியேற்றுவதினாலேயே நாங்கள் அமைச்சா் பேரியல் அஷ்ரப் அமைச்சராக இருந்த சமயத்தில் வழக்கு தாக்கல் செய்தோம். அதற்கு அடுத்த ஒரு வருடத்திற்குள் தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் வாழும் 3 சமுகத்திற்கும் இன விகிதாரசத்திற்கு ஏற்படி பகிர்ந்தளிக்காமல் ஏன் இப்படி இந்த திட்டம் அழிகிறது. இதனை உரிய அரச அதிபா் நீதிமன்ற தீா்ப்பின் படி 8 வருடங்களுக்கு முன்பே வழங்கியிருத்தல் வேண்டும். 
என பதிலளித்தாா். 

வீடில்லாத மூன்று அல்லது இரண்டு இனமும் இத்திட்டத்தில் பிரயோசனமடைவதற்கும் நாங்கள் ஆதரவு வழங்குவோம் எனவும் அவா் தெரிவித்தாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -