அக்கரைப்பற்றில் முஅத்தின்கள் மற்றும் பள்ளிவாசல் பணியாளர்களுக்கு கௌரவிப்பு விழா

ஏ.எல்.ஆஸாத் - சட்டக்கல்லூரி

ருங்கொடி மகுடம் இரண்டாம் கட்ட நிகழ்வு எதிர்வரும் 19ம் திகதி மாலை 04 மணிக்கு அக்கரைப்பற்று கடற்கரையில் நடைபெறவுள்ளது.

அக்கரைப்பற்றின் ஆளுமைகளை பாராட்டி கௌரவிக்கும் தொடர்நிகழ்வில் இரண்டாம் அங்கமாக இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

கருங்கொடி வெல்பெயா போரமின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் அக்கரைப்பற்றில் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களில் பணியாற்றும் முஅத்தின்கள் மற்றும் பள்ளிவாசல் பணியாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

இலை மறை காயாய் சமுகத்திற்காக உழைத்துவரும் பலரை பாராட்டி கௌரவிப்பதுடன் ஏனையவர்களையும் சமுக சேவையின் பால் முன்கொண்டு வருவதே இந்நிகழ்வு நடத்தப்படுவதற்கான நோக்கமாகும்.

கருங்கொடி மகுடம் நிகழ்வானது தற்போது அக்கரைப்பற்று மக்கள் மத்தியில் நல்வரவேற்பை பெற்றுள்ளது.

ஏதிர்வரும் 19ம் திகதி நடைபெறவுள்ள கருங்கொடி மகுடம் நிகழ்வுக்கு அனைவரும் கலந்து கொண்டு சமுக சேவையாளர்களை வாழ்த்துமாறு இந்நிகழ்வு ஏற்பாட்டுக் குழு அன்புடன் அழைக்கின்றது.

அக்கரைப்பற்றின் ஆளுமைகள் மற்றும் சமுக சேவையாளர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட வேண்டும் என எண்ணம் கொண்டு அதற்காக பலமாக உழைத்து வரும் HESSO அமைப்பின் முன்னால் தலைவரும் சமுக சேவையாளருமான எம்.எம். முகம்மட் தமீம் - கட்டார் இதற்கான பண உதவிகளை வழங்கி வருகின்றார். இவருடன் இணைந்து இன்னும் சிலரும் இந்நிகழ்விற்கான உதவிகளை வழங்கியுள்ளனர்.

கருங்கொடி மகுடம் முதலாம் கட்ட நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேசத்தின் கல்வியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் கருங்கொடி மகுடம் மூன்றாம் கட்ட நிகழ்வாக அக்கரைப்பற்று மாநகர சபையில் கடமையாற்றும் சுத்திகரிப்புத் தொழிலாளிகள் கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -