வாய் பேச முடியாதவரின் ஒரு முயற்சி - நாமும் உதவலாமே...!

னது தேடலில் உங்கள் முன் யாரிடமும் கையேந்தாத ஏழ்மையான ஒருவரை அறிமுகம் செய்கின்றேன் அல்ஹம்துலில்லாஹ்.

ஏறாவூர் ஓடாவியார் வீதியைச்சேர்ந்த அலியார் சாலி முகம்மது , வயது 60 இவர் பிறப்பிலே வாய்ப்பேச்சை இழந்த ஓர் அருமையான ஒரு மனிதர் . இவர் உண்மையில் யாருக்கும் கெடுதி செய்திருக்கமாட்டார் . இவரின் குடும்பம் ஏழ்மையானது . இவர் திருமணம் முடித்து மூன்று பிள்ளைகளுக்குச் சொந்தக்காரர் . அதில் ஒரு பெண் பிள்ளை மற்றது இரண்டு ஆண் பிள்ளைகள். இம்மூன்று பிள்ளைகளும் பாடசாலை மாணவர்கள் . ஆனால் இவரின் தொழில் மீண் பேக். அதாவது சீமெந்துப்பக்கட் பேப்பரை வாங்கி தனது வீட்டில் அதனை சுத்தம் செய்து ஒவ்வொரு துண்டாக வெட்டி பின்னர் கோதுமை மா கொண்டு ஒட்டி பேக்காக உருவாக்கி மார்க்கட்டுக்கு கொண்டு வந்து விற்பார். 

அன்று தொடக்கம் இன்று வரையும் இவரின்தொழில் இதுவேதான் . ஒரு நாளைக்கு ரூபா 300/= வருமாணம் கிடைக்கும் அதனைக்கொண்டுதான் குடும்ப வாழ்க்கை நடத்துகின்றார். இது அவருக்கு போதுமானதாக இல்லை. சில நேரங்களில் மார்க்கட் வியாபாரிகள் உதவி செய்வதும் உண்டு. எனவேதான் உங்களால் முடிந்த உதவிகளை இந்த ஏழைக்கு உதவுங்கள். 
தொடர்புகளுக்கு:- 0771603555
Abdul Azeez.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -