விஸ்வரூபமெடுக்கும் சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை...!

எம்.வை.அமீர் -
வ்வப்போது தேர்தல் காலங்களில் மட்டும் கறிவேப்பிலையாகவும், பகடைக்காயாகவும்,மக்களை ஏமாற்றும் தலைப்பாகவும் இருந்து வந்த சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளு ராட்சி சபையை வென்றெடுக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புதிய வியூகத்துடன் முன்னெடுக்கும் செயற்பாடானது வரவேற்கத் தக்கது.

இச்செயற்பாட்டினை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அம்பாரை மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமைப்பாளரும் அரச வர்த்தக கூட்டுத் தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம். ஜெமீல் தேசியத் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் வழிகாட்டலில் கிடப்பிலிடப்பட்டிருந்த சாய்ந்தமருதுக்கான நியாயமான உள்ளுராட்சிமன்ற விவகாரத்தினை வென்றெடுப்பதற்கான நடவடிக்கையாக சாய்ந்தமருது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழுவின் தலைவரும், அமைப்பாளருமான அல்-ஹாஜ் ஏ.எல்.எம். அன்வர் தலைமையில் அதன் செயலாளரான ஐ.எல்.ஏ. றாஸீக் உட்பட மத்திய குழு உறுப்பினர்களும் கலந்து கொண்ட விசேட சந்திப்பில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா கலந்து கொண்டு சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்றக் கோரிக்கை நியாயமானதென்றும், மக்கள் நலன் சார்ந்த தென்றும் தெரிவித்ததோடு உள்ளுராட்சி சபைகளை வரையறுப்பது தொடர்பில் நியமிக் கப்பட்ட குழுவுக்கு தனதுபரிந்துரையினை கையளிப்பதாக உறுதியளித்தார்.

இவ்விடயத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனும் பிரதித்தலைவர் ஏ.எம். ஜெமீலும் தன்னிடம் பலமுறை சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபைக்கான நியாய மான காரணங்களை தெளிவாகவும் தர்க்கரீதியாகவும் முன் வைத்துள்ளனர். எனவே இவ்வியடத்தில் நான் மிகவும் கரிசனையுடன் செயற்படவுள்ளேன் என்றும் உறுதியளித்தார்.

சாய்ந்தமருது உள்ளுராட்சிமன்ற விடயம் சம்பந்தான முன்னெடுப்பினை மேற்கொண்ட சாய்ந்தமருது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மத்திய குழுவின் செயற்பாட்டினை சாய்ந்தமருதின் புத்தி ஜீவிகள், விவசாயிகள், மீனவ சமூகத்தினர், வர்த்தகர்கள், மாதர் அமைப்பினர்கள், இளைஞர்கள், முதியோர் அமைப்பினர், பள்ளிவாசல் தரப்பினர் உட்பட பலதரப்பட்ட மக்களும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

இதேவேளை சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையை வலியுறுத்தி சாய்ந்தமருதிலுள்ள அனைத்து ஜும்ஆ பள்ளிவாசல்களிலும் 2016.07.22ந் திகதி வெள்ளிக் கிழமை விசேட ஜும்ஆ பேருரையும், துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது. இந்நிகழ்வுகளில் சாய்ந்தமருது வாழ்மக்கள் அனைவரும் உணர்ச்சிபூர்வமான உணர்வுகளுடன் கலந்து கொண்டனர். முக்கிய ஜும்ஆ பேருரையும், துஆ பிரார்த்தனையையும் மேற்கொண்ட சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பேஷ் இமாம் அல்-ஹாஜ் எம்.ஐ. ஆதம்பாவா (ரஸ்ஸாதி) அவர்களுக்கும் மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.
(சாய்ந்தமருது ஏ.சி.எம்.சி .மத்தியகுழுவின் ஊடக அறிக்கை)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -