நான் பொதுமக்களுக்கு மாத்திரமே கட்டுப்படுவேன் – ஜனாதிபதி

தற்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகள் நடந்துகொண்டதைப் போல் நடந்துகொள்ள தான் தயாரில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி, தான் ஜனநாயகத்தையும் ஒற்றுமையையும் மதிக்கும் அனைவரதும் குரல்களுக்கு செவிசாய்க்கும் ஒரு ஜனாதிபதி எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள ஜனாதிபதி, பிரதமருக்கும் கட்டுப்பட்டவரென முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, தான் இந் நாட்டின் பொதுமக்களுக்கு மாத்திரமே கட்டுப்படுவதாகத் தெரிவித்தார்.

அப்போதிருந்த ஏகாதிபத்திய ஆட்சி மக்களினால் நிராகரிக்கப்பட்டதன் காரணமாகவே தான் இந் நாட்டு ஜனாதிபதிப் பதவிக்கு நியமிக்கப்பட்டதாக தெரிவித்த ஜனாதிபதி, தான் அனைவரது குரல்களுக்கும் செவிசாய்த்து நாட்டின் தேவையின் அடிப்படையிலேயே தீர்மானம் மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

இன்று (02) முற்பகல் தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்ற சர்வதேச கூட்டுறவு தின வைபவத்தில் உரையாற்றிய போதே ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -