மு.கா.தவிசாளர்,செயலாளர் ஆகியோரின் அறிக்கைகளில் சுய நல அரசியல் தாண்டவம் ஆடுகிறது - நாபீர்

எம்.வை.அமீர் -
ரு கட்சியில் இருக்கும் வரை அவர்களின் மூலம் கிடைத்த பதவி, பட்டம், சொகுசு என்று சகல விடயங்களையும் ஒன்று விடாமல் அனுபவித்து விட்டு இப்போது தான் விரும்பிய இலக்கு கிடைக்காவிடின் ரகசியங்களை வெளியிடப் போகிறேன், குட்டுகளை உடைக்கப் போகிறேன், புட்டுகளை அவிக்கப் போகிறேன் என்று மு.கா.வின்தவிசாளர் பஷீர் சேகு தாவூத் அடிக்கடி அறிக்கை விடுவது எனது பார்வையில் மலிந்த அரசியல் நோக்கம்கொண்டதும், சிறு பிள்ளைத்தனமிக்கதுமாகும். என்று நாபீர் பவுண்டேஷனின் முகாமைத்துவ பணிப்பாளர் நாபீர் உதுமான் கண்டு ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துத்தெரிவித்துள்ள நாபீர்,

ஒரு வகையில் இக்குணம் முனாஃபிக்கின் செய்கை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மு.கா. கட்சிக்குள் பிழைகள், வழுக்கள், ஊழல் மோசடிகள், தேர்தல் காலத்தில் பணம் கொடுக்கல் வாங்கல்கள் நடை பெற்றிருந்தாலோ, வேறு அரசியல் சித்து விளையாட்டுக்கள் இடம் பெற்றிருந்தாலோ அதற்கு அதன் தலைவர்மாத்திரமல்ல பொறுப்பு வாயந்த பதவியில் இருந்த அத்தனை பேரும் உடந்தையாய் இருந்திருக்க வேண்டும்.

இதில் தலைவரின் பக்கம் சுட்டு விரலை நீட்டி விட்டு தவிசாளர், செயலாளர் தனித்து விலகுவது நாகரிகம் மிக்க செயற்பாடு அல்ல என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். பஷீர் அவர்கள் கட்சியையும், முஸ்லீம் சமூகத்தையும் நேசிக்கும் ஒருவராயின் இப்படி எல்லாம் பேசிக் கொண்டிருக்க மாட்டார். இவரது வார்த்தைப் பிரயோகங்களில் சுய நல அரசியல் தாண்டவம் ஆடுவதை அவதானிக்க முடிகிறது. எம்.பி. அல்லது மந்திரிப் பதவி ஒன்றை கொடுத்தால் தலைவர் ஹக்கீம் பஷீரின் சபையில் புனிதர் ஆகி விடுவார். இது போல் தான் செயலாளர் ஹசன் அலி அவர்களின் தலைவருடனான ஊடல் நாடகமும் கணிக்கப் படுகிறது.

இப்போது பரவலாக பேசப்படுகின்ற கிழக்கின் எழுச்சியின் முக்கிய தூண்களாக ஹசன் அலியின் மகனும் மருமகனும் செயற்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். செயலாளர் ஹசன் அலி அவர்களுக்கு நான் மேற்சொன்ன பதவியும் அதிகாரமும் கிடைத்து விட்டால் கிழக்கின் எழுச்சி எனப்படும் கடை அடுத்த நொடியில் இழுத்து மூடி விடப்படுவது திண்ணம். 'பாட வந்தால் கிழவியும் பாடுவது' போலவே இவர்களது அரசியல் செயற்பாடுகள் என்பதை நாம் அறியாமல் இல்லை. மக்களை ஏமாற்ற முடியாது. அவர்கள் மிகவும் விழிப்புடன் இருக்கிறார்கள். முஸ்லிம் மக்களின் நன்மை கருதி எல்லோரும் சீரிய மனதுடன் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -