நல்லாட்சி போர்வைக்குள் மறைந்து கொண்டு தவறிழைக்க ஒருபோதும் இடமளிக்கப்படாது - ஜனாதிபதி

ல்லாட்சி என்ற போர்வைக்குள் மறைந்து கொண்டு தவறிழைப்பதற்கு எவருக்கும் ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அபிவிருத்தி சவால்கள் எனும் தொனிப்பொருளில் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, 

நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்த அனைவரும் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு தங்களது பணிகளை செவ்வனே செய்ய வேண்டும். மேலும், நல்லாட்சி மற்றும் நல்லெண்ண செயற்பாடுகளின் ஊடாக நாட்டையும், நாட்டு மக்களையும் வெற்றியடைய செய்ய அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.

அதேவேளை, ஒழுக்க விழுமியங்கள், பண்பாடு, நல்லாட்சி எண்ணக்கரு, சட்டத்தைப் பேணுவதுடன், பாதுகாத்து போஷித்தல் போன்ற காரணிகள் மீது ஆரம்பம் முதல் நம்பிக்கை வைத்துள்ளேன். அத்துடன், பிரதமர் மற்றும் அமைச்சர்களுடன் கலந்துரையாடி அரச உத்தியோகத்தர்களின் சுயாதீன சேவையை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் எதிர்ப்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும், அதிகாரம் மீது தமக்கு பேராசை இல்லையென்று குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, சொல்ல வேண்டிய விடயங்களை சொல்வதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் தயக்கம் காட்டப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதேவேளை, நாட்டில் இடம்பெறும் முறைகேடுகளை எந்த விதத்திலேனும் நிறுத்த வேண்டிய தேவை காணப்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, மனிதனிடம் அச்சம் மற்றும் வெட்கம் இல்லையெனில், மனிதன் விலங்கைப் போன்றே நடந்துகொள்ள நேரிடும் எனவும் மேலும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -