ஸாஜில் மீடியாவின் 'ஈதுன் ஸயீத்' மாபெரும் பெருநாள் நிகழ்ச்சி...!

ட்டமாவடி அல் கிம்மா நிருவனத்தின் அனுசரனையில் ஸாஜில் மீடியா நெட்வேர்க் இணைந்து வழங்கிய 'ஈதுன் ஸயீத்' மாபெரும் பெருநாள் நிகழ்ச்சி கடந்த (08) வெள்ளிக்கிழமை காத்தான்குடி அன்வர் கடற்கரை திடலில் இடம் பெற்றது.

இந் நிகழ்வு சரியாக மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 10.00 மணி வரை இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வித்தியாசமான பல சிறப்பு போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், சிறியவர் மற்றும் பெரியவர் என அனைவரையும் கவரக்கூடிய வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளாக மேடையில் இடம் பெற்றன.

நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசில்களும், தோல்வியுற்றவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் இந் நிகழ்வில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொணடமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டி நிகழ்ச்சிகளை ஸாஜில் மீடியா அறிவிப்பாளர் சகோதரர் நஜிம் மற்றும் சுஜா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்படத்தக்கது.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -